யாரும் தலையிட முடியாது!

நாட்டின் இறையாண்மையில், இராணுவத் தளபதியின் நியமனத்தில் எந்த நாடும் தலையிட முடியாது என்று லங்கா நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

‘ஐ.நாவில் ஏனைய நாடுகள் போல்த்தான் இலங்கையும் அமெரிக்காவும் அங்கம் வகிக்கின்றன. எந்த ஒரு நாடும் எமது நாட்டு இறையாண்மையில் தலையிட முடியாது. சவேந்திரவின் நியமனத்தில் அரசை தவிர எவரும் தலையிட முடியாது. இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் எமது நாட்டின் நீதித்துறை ஊடாக அதனை விசாரிக்க முடியும். என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!