ஏணியின் இடுக்கில் தலை சிக்கியதால், 5 நாட்களாக தவித்த முதியவர்: பரிசோதித்த வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டில் முதியவரொருவர், தனது கழிவறையை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவரது தலை ஏணியின் இடுக்கில் சிக்கிக் கொண்டது. எதுவும் செய்ய முடியாமல், அப்படியே ஐந்து நாட்களை கழித்துள்ளார் அந்த முதியவர்.

இந்நிலையில் குறித்த முதியவர், 5 நாட்களின் பின்னரும் வைத்தியர்கள் வந்து பார்க்கும் போது சுயநினைவுடனே இருந்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவர் தனது கழிவறையை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தபோது ஏணியில் உள்ள இரு படிகட்டுகளுக்கு இடையே அவரின் தலை மாட்டிக் கொள்ள வெளியே வர முடியாமல் தலை வீங்கிப்போனது. அவரால் கைபேசியையும் எடுக்க முடியவில்லை.

இதனால், தலைக்கு இரத்த ஓட்டம் செல்வது குறைந்து, உடலில் நீர்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இருந்தபோதும் அவரிற்கு உயிராபத்து ஏதும் நிகழா வண்ணம் அதிர்ஸ்ட்ட வசமாக தப்பியுள்ளார்.

இநநிலையில் அம்முதியவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!