“ஐ.தே.க. பிளவுப்படுத்த வேண்டிய தேவை சு.க.வுக்கில்லை”

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெரிவித்த அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, ஐ.தே.க உறுப்பினர்களே தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது ‘ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்துகிறார் ‘ என்று குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா என்பது ஹிருணிகாவிற்கு தெளிவில்லாமல் இருக்கிறது. எனவே தான் யார் வேட்பாளர் என்பதைத் தெரிந்து கொண்டு அவர் பக்கம் சாய்வதற்கு ஹிருணிகா திட்டமிடுகிறார். அதற்கு சுதந்திர கட்சியைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

எனவே இவ்வாறான ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக விவகாரங்களில் வீணாக சுதந்திர கட்சியை தொடர்புபடுத்த வேண்டாம் என்று நாம் ஹிருணிகாவுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!