ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு!

ஒருமித்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே தனது நோக்கம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.

‘நாட்டு மக்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என வேறுபடுத்துவது நியாயமற்றது . ஒருமித்த இலங்கை என்ற கொள்கையில் எந்தவித விட்டுக்கொடுப்பும் செய்துகொள்ளப்படாது. ஒருமித்த இலங்கை என்பது எழுதப்பட்ட ஆவணமாக மாத்திரம் இருக்க கூடாது. மாறாக அதனை ஓவ்வொரு இலங்கையர்களும் மன ரீதியான உணர வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குகிறேன். இவற்றை முன்னெடுக்க வேண்டுமாயின் இனவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!