எமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் – விக்கினேஸ்வரன்

உரி­மை­களைக் கேட்­பது இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்­து­மானால் நாம் மௌனம் சாதிக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு நாம் வாளா­தி­ருந்தால் நாடு பூரா­கவும் சிங்­கள பௌத்த மய­மாக்­கப்­படும். பிழை­களை சிங்­களத் தலை­வர்கள் தம்­வசம் வைத்­துக்­கொண்டு தமி­ழர்­களை பிழை கூறு­வது பொருத்­த­மா­ன­தன்று என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

எமது உரித்­துக்­களைப் பெறும் வரையில் நாம் போரா­டா­விட்டால் நாம் இருந்த இடமே தெரி­யாமல் போய்­விடும்.

தமி­ழரை விரட்­டி­ய­டிக்க வேண்டும் அவர்­களின் அதி­கா­ரங்­களை குறைக்­க­வேண்டும் என்று கங்­கணம் கட்­டிக்­கொண்டு செயற்­பட்ட சிங்­கள அர­சியல் தலை­வர்­க­ளால் தான் நாட்டில் இக்­கட்­டான நிலைமை ஏற்­பட்­டது. வடக்கில் தற்­போது நடை­பெறும் ஆக்­கி­ர­மிப்­புக்­களைப் பார்த்தால் தமி­ழர்கள் வட­கி­ழக்கில் தொடர்ந்து பெரும்­பான்­மை­யி­ன­ராக கணிக்க முடி­யாத நிலையே உரு­வாகி வரு­கின்­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வாராந்த கேள்­விக்கு பதில் வழங்­கு­கை­யி­லேயே முத­ல­மைச்சர் இதனை தெரி­வித்­துள்ளார். புலி­களைத் தொடர்ந்து இந்த நாட்டில் ஒரு இக்­கட்­டான நிலை­மையை உரு­வாக்க நீங்கள் நினை­வேந்தல் கூட்­டங்கள் மூலம் வழி அமைக்­கி­றீர்கள் அல்­லவா? இவை தேவையா என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு முத­ல­மைச்சர் அளித்­துள்ள பதில் வரு­மாறு,

பதில்: தேவை. மர­ணித்­த­வர்­களின் நினைவை நாம் வரு­டந்­தோறும் ஏந்தல் எமது பாரம்­ப­ரிய வழக்கம். அநி­யா­ய­மாக கொல்­லப்­பட்ட எமது உற­வு­களின் நினை­வேந்­தலை நடத்­து­வது வழக்­க­மான நினை­வேந்­தல்­களை விட முக்­கி­ய­மாகத் தேவை­யா­ன­தொன்று. எமது மக்கள் தற்­செ­ய­லாகச் சாக­வில்லை. கொடூ­ர­மாகக் கொலை செய்­யப்­பட்­ட­வர்கள். ஒரு இடத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு, சர­ண­டைந்தால் விடு­விப்போம் என்று பல பசப்பு வார்த்­தைகள் கூறி எம் மக்­களைச் சதி செய்து கொன்ற நிகழ்வை நாம் நினைவில் ஏந்­தாது எப்­படி இருப்­பது? போரில் இறந்­த­வர்­களை நினைவு கூரு­வது, அவர் சாந்­திக்­காகப் பிரார்த்­தனை செய்­வ­தென்­ப­தெல்லாம் சர்­வ­தேச சமூ­கத்தால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட மனித உரி­மை­களின் அல­குகள். ஆகவே நினை­வேந்­தலின் முக்­கி­யத்­து­வத்தை நீங்கள் இப்­போது உணர்ந்து கொண்­டி­ருப்­பீர்கள் என்று நம்­பு­கின்றேன்.

புலி­களைத் தொடர்ந்து இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்த விழை­கின்றோம் என்ற உங்கள் அடுத்த கூற்று நகைப்­புக்­கு­ரி­யது. வட கிழக்கில் எமக்­கான உரித்­துக்­களை நாம் முன் வைத்தால் உடனே பதட்­டப்­ப­டு­வது கொழும்பில் உள்ள தமி­ழர்கள் தான். தமக்­கி­ருக்கும் சொத்து, சுகம், வச­திகள், பத­விகள் யாவற்­றையும் இழந்து விடு­வோமோ என்ற பயந்தான் உங்­களை அவ்­வாறு சிந்­திக்க வைக்­கின்­றது.

தமி­ழர்­க­ளா­கிய எங்­க­ளு­டைய இது­வ­ரை­யான நிலை­மையை எண்ணிப் பாருங்கள். வௌ்ளையர் காலத்தில் நாடு பூரா­கவும் வாழ்ந்தோம். மற்­றைய இனங்­க­ளுடன் சேர்ந்து ஒற்­று­மை­யாக வாழ்ந்தோம்.

அதி­கா­ர­மா­னது வௌ்ளைய­ரிடம் இருந்து பெரும்­பான்மை சமூகம் வசம் சென்­ற­வுடன் அவர்கள் செய்­தது என்ன?

தமி­ழர்கள் பரந்து வாழ்ந்த முழு­நாட்டில் இருந்தும் குறிப்­பாக தெற்கில் இருந்து படிப்­ப­டி­யாக அவர்கள் வௌியேற்­றப்­பட்­டார்கள். தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான இனக் கல­வ­ரங்கள் மூலமும் புதிய புதிய சட்­டங்கள் மூலமும் இதனைச் சாதித்­தார்கள். எம்முட் பலர் மெல்ல மெல்ல வௌிநா­டு­க­ளுக்குச் செல்லத் தொடங்­கி­னார்கள். இலங்கைத் தமி­ழர்­களின் சனத் தொகை குன்றத் தொடங்­கி­யது. யுத்தம் இந்த வௌியேற்­றலைத் துரி­தப்­ப­டுத்­தி­யது. போரின் முடிவைப் பாவித்து வட­கி­ழக்கு மாகா­ணங்­களைத் தொடர்ந்து ஒன்­பது வரு­டங்­க­ளாக படை­யினர் தம் கைவ­சப்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். அவர்கள் தொடர்ந்து இங்கு இருப்­பதால் வரும் பாதிப்­புக்கள் பற்றி ஏற்­க­னவே பல தடவை கூறி­விட்டேன். அவை பற்றி உங்­க­ளுக்குத் தெரியும் என்று நம்­பு­கின்றேன். உரி­மை­களைக் கேட்­பது இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்­து­மானால் நாம் மௌனம் சாதிக்க வேண்டும். அவ்­வாறு வாளா­தி­ருந்தால் நாடு பூரா­கவும் சிங்­கள பௌத்த மய­மாக்­கப்­படும். அதை விரும்­பு­கின்­றீர்­களா?

புலி­களைத் தொடர்ந்து நாம் ஒரு இக்­கட்­டான நிலையை உண்­டாக்கத் தலைப்­பட்­டுள்ளோம் என்று கூறு­கின்­றீர்கள். அது சரியா? புலிகள் ஏன் உண்­டா­னார்கள்? தமிழ் மக்கள் இரண்­டாந்­தரப் பிர­ஜைகள் ஆக்­கப்­பட்ட பின்­னரே எமது இளை­ஞர்கள் யுத்தம் பற்றி சிந்­திக்கத் தொடங்­கி­னார்கள்.

தெருவில் போகும் ஒரு­வனை நோக்கி நீங்கள் உங்கள் வீட்டு நாயை அவிழ்த்து விடு­கின்­றீர்கள். அவன் தற்­பா­து­காப்­புக்­காக கல்லை எடுத்து நாயின் மீது எறி­கின்றான். உங்கள் யன்னல் கண்­ணாடி அதனால் உடை­கி­றது. உடனே நீங்கள் போலி­சுக்கு தொலை­பேசி எடுத்து இன்னார் என் வீட்­டுக்குக் கல் எறிந்து விட்டான். பிடி­யுங்கள் அவனை. சிறையில் போடுங்கள் அவனை என்­றெல்லாம் சொல்லிக் குமு­று­கின்­றீர்கள். தெருவில் சென்­றவன் அமை­தி­யாகச் சென்று கொண்­டி­ருந்தான். நீங்கள் தான் உங்கள் நாயை உசுப்­பேற்றி அவன் அண்டை அனுப்­பி­னீர்கள். எதிர் வினை­யா­கவே அவன் கல்லை எறிந்தான். கல்லை அவன் எறி­யா­விட்டால் நாய் அவனைக் கிள்ளிக் குதறி எடுத்­தி­ருக்கும். நாய் என்று கூறி­யது அர­சினால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத இன வழிக் கொலை­களும் சட்ட மாற்­றங்­களும். இந்தக் கதையில் வரும் உங்­களைப் போலத்தான் சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் இது­காறும் நடந்து வந்­துள்­ளார்கள்.

பிழை­களை மத்­திய அர­சாங்க சிங்­களத் தலை­வர்கள் தம் வசம் வைத்துக் கொண்டு தமி­ழர்­களைப் பிழை கூறு­வது பொருத்­த­மா­னது அன்று.

தமி­ழரை விரட்டி அடிக்க வேண்டும், அவர்­களின் அதி­கா­ரங்­களைக் குறைக்க வேண்டும் என்று கங்­கணங் கட்டிக் கொண்டு நடந்து கொண்ட சிங்­கள அர­சியல் தலை­வர்­க­ளால்த்தான் நாட்டில் இக்­கட்­டான நிலைமை ஏற்­பட்­டது.

சிங்­களம் மட்டும் என்ற போது வடக்கு கிழக்கில் தமிழ் என்­றி­ருக்­கலாம் அல்­லது இட­து­சா­ரிகள் அன்று கூறி­யது போல் இரு மொழி­களும் அரச கரும மொழி­களே என்று சட்டம் கொண்டு வந்­தி­ருக்­கலாம். ஆகக் குறைந்­தது 1958ம் ஆண்டின் பண்­டா­ர­நா­யக்க – செல்­வ­நா­யகம் உடன்­பாட்­டை­யா­வது நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். தமி­ழர்­க­ளிடம் இருந்து அவர்கள் உரி­மை­களைப் பறித்த நிலையில் அவர்கள் உரி­மை­களை அவர்­க­ளுக்குத் திருப்பிக் கொடுக்­காது இருந்து கொண்டு இருக்கும் இன்­றைய நிலையில் ஒரு இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்­தா­தீர்கள் என்று சொல்­வதைப் பார்த்தால் தெற்கு எவ்­வ­ளவு தான் உங்­களைக் குட்­டி­னாலும் குட்டை ஏற்றுக் கொண்டு பணிந்து நட­வுங்கள் என்று நீங்கள் சொல்­வது போல் இருக்­கின்­றது. எமது உரித்­துக்­களைப் பெறும் வரையில் நாம் போராடா விட்டால் நாம் இருந்த இடமே தெரி­யாமல் போய்­விடும்.

ஏற்­க­னவே வட­கி­ழக்கில் எமது காணிகள் படை­யி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பல தட­வை­களில் வட­மா­காண சபைக்குத் தெரி­யா­மலே இது நடந்­துள்­ளது. ஏற்­க­னவே எமது காணி­களில் வௌியார் கொண்­டு­வ­ரப்­பட்டு குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள். புதிய சிங்­களக் கிரா­மங்கள் முளைக்கத் தொடங்­கி­யுள்­ளன. ஏற்­க­னவே வன திணைக்­களம் போன்­றவை எமது மக்­களைத் தாம் குடி­யி­ருக்கும் இடங்­களில் இருந்து வௌியேற்­று­கின்­றார்கள். ஏற்­க­னவே எமது பல்­க­லைக்­க­ழ­கங்­களில் 50மூ மேற்­பட்­ட­வர்கள் சிங்­கள மாணவ மாண­வியர். ஏற்­க­னவே பல திணைக்­க­ளங்­க­ளுக்குத் தேவை நிமித்­தமும் மத்­திய அர­சாங்­கத்தின் ஏற்­பாட்டின் நிமித்­தமும் தென்­னவர் கொண்டு வரப்­பட்­டுள்­ளார்கள். ஏற்­க­னவே பல ஏக்கர் காணிகள், விவ­சாயம், விவ­சாயப் பண்­ணைகள் படை­யினர் கைவசம். ஏற்­க­னவே மீன் பிடித்­த­லுக்கு வௌி மாவட்ட மீன­வர்கள் படை­யினர் அனு­ச­ர­ணை­யுடன் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

நடப்­ப­வற்றைப் பார்த்தால் தமி­ழர்கள் வட கிழக்கில் தொடர்ந்து பெரும்­பான்­மை­யி­ன­ராகக் கணிக்க முடி­யாத நிலையே உரு­வாகி வரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் யாரென்று பார்க்­காமல் எமது உற­வினர் கொன்று குவிக்­கப்­பட்ட நாளில் இறந்­த­வர்­களை நினைவில் ஏந்­தாது சும்மா இருக்­கு­மாறு சொல்­கின்­றீர்­களா? சும்மா இருந்­தால்த்தான் பிரச்­சினை முடி­வுக்கு வருமா?

பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஜேர்­ம­னியர் ஒருவர் கூறி­யது ஞாப­கத்­திற்கு வரு­கின்­றது. பல­ரையும் ஜேர்­ம­னிய ஹிட்லர் அரசு கைது செய்து கொண்டு போனது. தொழிற் சங்­கத்­தினர், விவ­சா­யிகள், மதா­சா­ரி­யர்கள் என்று அந்த அரசு கொண்டு செல்லும் போது நான் வாளா­தி­ருந்தேன். சும்மா இருந்தால் சுகம் பெறலாம் என்­றி­ருந்தேன். கடை­சியில் என்­னையும் பிடித்துச் சென்­று­விட்­டார்கள். என் சார்பில் குரல் எழுப்ப எவரும் இல்லை என்றார்.

இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்­தா­தீர்கள் என்­கின்­றீர்கள். சும்மா இருந்தால் சுகம் பெறலாம் என்று நீங்கள் நினைக்­கின்­றீர்கள். அவ்­வாறு நடப்­ப­தில்லை. உங்கள் உரித்­துக்­களை நீங்கள் உரத்துக் கூறிப் பெற­விட்டால் எவ­ருமே உங்­க­ளுக்கு உதவி செய்ய முன் வர­மாட்­டார்கள்.

1983 ஜூலைக்கு முன்­னைய மாதங்­களில் ஜே.ஆரின் திறந்த பொரு­ளா­தாரம் பாரிய பொரு­ளா­தா­ர­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­தி­யது. பல தமி­ழர்கள் வௌிநா­டு­களில் இருந்து இலங்கை திரும்பி வணி­கத்தில் ஈடு­பட விரும்­பி­னார்கள். ஆனால் நடந்­தது என்ன?

ஜூலைக் கல­வரம் ஏற்­க­னவே நல்ல நிலையில் இருந்த வணிக நிலை­யங்­களைத் தீயிட்டு கொளுத்­தி­யது. பொரு­ளா­தார ரீதியில் கணி­ச­மான முன்­னேற்­றத்தைப் பெற்­றி­ருந்த எமது வணிகப் பெரு­மக்கள் பலர் சக­ல­தையும் இழந்து நிற்கும் ஒரு நிலைக்குத் தள்­ளப்­பட்­டார்கள். அவர்கள் எதற்கும் குரல் கொடுக்­கா­த­வர்கள். சும்மா இருந்தால் சுகம் பெறலாம் என்று நம்­பி­ய­வர்கள்.

ஆகவே அன்­பரே! இவ்­வா­றான கேள்­வி­களைக் கேட்டு உங்கள் சுய­நல சிந்­தையை வௌிப்­ப­டுத்­தாதீர். போரில் அநி­யா­ய­மாக கொல்­லப்­பட்­ட­வர்­களைப் பற்றி குரல் எழுப்ப முடி­யா­விட்­டாலும் இறந்­த­வர்­களை நினைத்து அவர்கள் ஆத்மா சாந்­தி­ய­டையப் பிரார்த்­தனை செய்­யுங்கள்.

எமது பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் முன்வராவிடினும் எம்மை விமர்சிக்காது இருங்கள். தமிழ் மக்கள் என்ற ரீதியில் இன்னும் 20 வருடத்தில் வடகிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழ்வார்களா இல்லையா என்பதையும் பெரும்பான்மையினராக தமிழர்கள் தான் தொடர்ந்து வாழ்வார்களா என்பது பற்றி எல்லாம் சற்று நின்று நிதானித்து முடிவுக்கு வாருங்கள். எம் மக்கள் படிப்படியாக விரட்டப்படும் நிலையில் எமது கடமைகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். பெரும்பான்மையினருடன் சங்கமமாகிவிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கிருந்தால் நாமும் அந்த எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது மடமை. ஒரு இனத்தை இவ்வாறு அழிப்பது, சங்கமமாக்குவது, படிப்படியாக இல்லாமல் ஆக்குவது இனப்படுகொலை என்று சர்வதேச ஆவணங்கள் கூறுகின்றன.

ஆகவே இனப்படுகொலைக்கு ஆதரவு தெரிவித்தா இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டீர்கள்? பதில் தாருங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!