வீட்டுத் திட்டத்தை நிறைவுசெய்ய நிதி பற்றாக்குறை – மக்கள் விசனம்

கிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள 100 வீட்டுத்திட்டங்களுக்கு போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் குறித்த வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் காணிகளற்ற மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டதுடன் 100 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் குறித்த வீட்டுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியொதுக்கீடானது போதுமானதாக இல்லாத காரணத்தினால் குறித்த வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யமுடியாதுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!