பேட் பிடிக்க முடிந்த கையால், வாள் பிடிக்க முடியாதா? ; சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் அணி வீரர்

பேட் பிடிக்க முடிந்த கையால் வாள் பிடிக்க முடியாதா?’ என்று ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முன்னாள் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்திய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவைத் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும், லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது.

ஆனால், பாகிஸ்தானுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை, இதனால் ஐ.நா.வில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட் இந்தியாவுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துக்களைக் கூறும் கணொளியொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

அந்த கணெளிக் காட்சியில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து கொண்டு கையில் வாளை ஏந்தியபடி, ”காஷ்மீர் சகோதரர்கள் கவலைப்படவேண்டாம். சிக்ஸர் அடிக்க பேட் பிடிக்க முடிந்த என்னால, வாள் பிடிக்க முடியாதா? நான் என்னுடைய பேட்டால் சிக்ஸர்களை அடித்திருக்கிறேன். இப்போது என்னுடைய வாளால் மனிதர்களைக் கொல்வேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!