மகளிற்கு நிகரான மருமகளிற்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்: இரு உயிர்களை பலியெடுத்த தீராக் கோபம்

இந்தியா, கர்நாடகாவில் மாமனார் ஒருவர் தந்த தொடர் பாலியல் தொல்லையால் மருமகள் இரு கொலைகளை செய்துள்ள கொலையாளியாகியுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கர்நாடகா மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் கணவன் மனைவி இருவரும் கூட்டுக்குடம்பமாக மாமனார், மாமியாருடன் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்னரே திருமணம் நிகழ்ந்துள்ளது.

மாமனார், தன் மருமகள் மீது ஆசைப்பட்டு பாலியல் அத்துமீறல்களில் அவ்வப்போது ஈடுபட்டுள்ளார். மருமகள் துணி மாற்றும் போது அவர் அறைக்கு செல்வது, யாரும் இல்லாதபோது கட்டிப்பிடிப்பது போன்ற அருவருப்பான செயல்களை செய்து மருமகளை மன உளைச்சலை கொடுத்துள்ளார். இதை தன் கணவனிடமும் சொல்லமுடியாமல் தவித்து வந்துள்ளார். தன் மகனிடம் மருமகள் இந்த விஷயத்தை சொல்லாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மாமனாரின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மருமகளிடம் அவர் வரம்பு மீறவே உச்சகட்ட கோபத்தில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அவரைக் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்த அவர் உயிருக்குத் துடித்துள்ளார். இதை பார்த்து அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவியையும் அதே இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் மருமகள்.

குறித்த இச்சம்பவம் பற்றி அறிந்த பொலிஸார் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!