5 எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, டிலான் பெரேரா, எஸ்.பி.திசநாயக்க ஆகியோருக்கும், ஐதேகவுடன் இணைந்து செயற்படும் ஏஎச்எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்சாவுக்கும் எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு இவர்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகரவினால் விளக்கக் கடிதம் கோரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!