சிறிலங்காவில் கொட்டித் தீர்த்த மழை- 300 மி.மீற்றருக்கும் அதிகம்

சிறிலங்காவின் பல இடங்களில் நேற்று 300 மி.மீ இற்கும் அதிகமான கனமழை பெய்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக்காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ பகுதியில், 353.8மி.மீ மழை பெய்தது. அடிகம பகுதியில் 339 மி.மீற்றரும், கமல்ஸ்ரம் பகுதியில் 302 மி.மீற்றரும் மழை கொட்டித் தீர்த்தது.

மாத்தளையில், 267 மி.மீ, இரத்தினபுரியில் 236.6 மி.மீ, குளியாப்பிட்டியில் 232 மி.மீ, குகுலேகங்கவில் 227 மி.மீ, மழை பெய்துள்ளது.

ஆனமடுவவில் நேற்று பெய்த 353.8 மி.மீ மழையே, அங்கு வரவாற்றில் அதிகளவில் பெய்த மழையளவாகும்.

தெனியாயவில், பெய்த 700 மி.மீ மழையே சிறிலங்காவில் ஒரே நாளில் பெய்த அதிகளவு மழைப் பொழிவாகும். கடந்த ஆண்டு களுத்துறையில் ஒரே நாளில் 500 மி.மீ மழை பதிவாகியதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!