எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதை பார்த்தா நீ தாங்க மாட்டே என ஒரு திரைப்படத்தில் ரஜினி ஒரு டயலாக் பேசுவார். ஆனால் சீனாவில் உள்ள ஒருவருக்கு நிஜமாகவே ஒரு புதிய முகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சீன டாக்டர்கள்.
சீனாவை சேர்ந்த Yan Jianbin என்ற நபர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஹை வோல்ட்டேஜ் மின்சாரம் அடங்கிய பாக்ஸ் ஒன்றை திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது ஹை வோல்டேஜ் பாய்ந்து அவருடைய முகம் முற்றிலும் சிதைந்தது. இந்தவிபத்தில் Yan Jianbin தனது வலது கண் மற்றும் மூக்கு ஆகியவற்றை முற்றிலும் இழந்தார். அவருடைய முகமும் மிகக்கோரமாக மாறியது.
அவருக்கு சிகிச்சை அளித்த Shenyang Army General Hospital, in Liaoning Province மருத்துவர்கள் Yan Jianbin அவர்களுக்கு புதிய முகத்தை பொருத்த முடிவு செய்தனர். இதற்காகவே அவருடைய இடது மார்பில் ஒரு பாஸ்கட் பந்து வடிவத்தில் ஒரு முகத்தை வளர்த்து பின்னர் அதை சர்ஜரி செய்து புதிய முகத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது முற்றிலும் புதிய முகத்துடன் Yan Jianbin கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கின்றார்.
















