உயரத்தில் கின்னஸ் சாதனை படைத்த இருவர் நேருக்கு நேர் சந்திப்பு.

guinness 2உலகிலேயே மிக உயரமானவர் என்ற சாதனையை பெற்றவரும் உலகிலேயே மிக குள்ளமானவர் என்ற சாதனையை பெற்றவரும் ஆகிய இருவரும் நேற்று லண்டனில் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொண்டனர். இந்த சந்திப்பை கின்னஸ் சாதனை நிறுவனம் நடத்தியது.

8 அடி 3 இன்ச் உயரமுள்ள சுல்தான் கோசன் என்பவர் ஒரு அடி 9.5 இன்ச் உயரமுள்ள சந்திரா டாங்கி என்பவரை நேற்று லண்டனில் சந்தித்தார். நேற்று நடைபெற்ற 10th annual Guinness World Records Day என்ற தினத்திற்காக இருவரையும் கின்னஸ் நிறுவனம் சந்திக்க வைத்தது.

உலகிலேயே மிக உயரமானவராக நான் இருந்தாலும் குள்ளமானவருக்கு என்னென்ன அசெளகரியங்கள்இருக்கின்றதோ கிட்டத்தட்ட அதே போன்ற ஒருசில அசெளகரியங்கள் எனக்கும் இருக்கின்றது. சந்திரா டாங் அவர்களை நேரில் சந்தித்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். அவரை பார்த்து பேசியதில் இருந்து அவர் மிகவும் நல்லவர் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறினார். எனக்கு கிடைத்த கின்னஸ் சாதனை எனக்கு பெருமையை தருவதாக இருவருமே கூறியுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply