20 ஆவது திருத்தச்சட்ட வரைவை இன்று சமர்ப்பிக்கிறது ஜேவிபி

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கும் வகையிலான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரவை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக, ஜேவிபி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, அரசியலமைப்புத் திருத்த வரைவு, இன்று நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளிக்கப்படும் என்று கூறினார்.

”இந்த திருத்த வரைவு நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், பல்வேறு நடைமுறைகள் உள்ளன. சட்ட தெளிவுபடுத்தல்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறுவதற்கு முன்னர், ஒரு சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். அதற்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த திருத்த வரைவு, சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!