அமேசானில் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை!

அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க வீரர்கள் போராடி வரும் நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக பிரேசில் நாட்டில் மழை பெய்துள்ளது. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ச்சியாக பல இடங்களில் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்கும் முயற்சியில் பிரேசில், பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவத்துக்கு சொந்தமான விமானங்களுடன் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பரவிய தீயில் கருகி பல அரிய மரங்கள் மற்றும் உயிரினங்கள் உயிரிழந்த சம்பவம் பலரையும் உலுக்கியது. மேலும் தீயை அணைக்கும் விதமாக மழை பெய்ய வேண்டும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில், தீயில் அதிகம் பாதிப்புக்குள்ளான பிரேசிலின் ரோன்டோனியா மாநிலத்தில் தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு, இதமான சூழல் நிலவியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!