இலங்கை நெருக்கடியின் ஒரு வெளிப்பாடே ராஜபக்ஷ முகாம் – அநுரகுமார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வல்ல.

உண்மையில் அந்த நெருக்கடியின் ஒரு வெளிப்படே ராஜபக்ஷ முகாம். அவர்கள் இனங்களுக்கிடையில் பிளவை உருவாக்குவதங்கு நாட்டு மக்களின் பாதுகாப்பைத் தாரைவார்த்தார்கள்.

அவர்களாகவே உருவாக்கிய பிரச்சினையினால் தேசிய பாதுகாப்பிற்குத் தோன்றிய அச்சுறுத்தலை தாங்களாகவே மீட்டுத்தரப் போவதாக இப்பொழுது உறுதி கூறுகின்றார்கள். அதனால் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருமே இன்றைய நெருக்கடிக்கு ஒரு தீர்வல்ல’.

தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறியிருக்கின்றார்.

கொழும்பு ஆங்கில வாரவெளியீடு ஒன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கிய திஸாநாயக்கவிடம் அவரை விடவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மாத்திமே இன்னுமொரு ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு அவர் பொருத்தமானவரா? என்று கேட்கப்பட்ட போது அவர் இந்தப் பதிலையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!