பாதணிகளை பகிர்ந்து கொள்ள இரட்டையர் கிடைத்துவிட்டதால் முடிவுக்கு வந்த விநோத பிரச்சினை!

உலகில் பலருக்கு பொதுவாக நிதிப்பிரச்சினை இருக்கின்ற போதும், ஒரு சிலருக்கு விநோதமான வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், தனது பாதணி சுமையை குறைத்துக் கொள்வதற்காக கனடா பெண்ணொருவர் நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த நிலையில், தற்போது அதற்கு தீர்வு கிடைத்து விட்டது. ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பாதங்களுக்கு இணையான பாதணி அளவைக் கொண்ட பிறிதொருவரை நீண்ட காலமாக தேட்டிக்கொண்டிருந்தார். Jessica Gray என்ற குறித்த பெண்ணுக்கு விநோதமான ஒரு பிரச்சினை இருந்தது. சிறு வயதில் ஏற்பட்ட நோய்த் தாக்கம் காரணமாக, அவரது இடது பாதம் வளர்ச்சியடைவது நின்றுபோனது. எனவே அவர் வளர்ந்த பெண்ணான போது, ஒரு பாத அளவு 7 ஆகவும் மற்ற பாதத்தின் அளவு 9 ஆகவும் ஆகிவிட்ட நிலையில், பாதணிகளை வாங்குவது பெரும் பிரச்சினையாகிப் போய்விட்டது. ஒவ்வொரு முறையும் இரண்டு ஜோடி பாதணிகள் வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

ஒரு பாதணி ஜோடி 7 அளவிலும், மற்றொன்று 9 அளவிலும் இருக்க வேண்டும். இதனால் குறைந்த விலையில் பாதணிகள் கிடைக்குமா, அல்லது தள்ளுபடியில் பாதணிகள் கிடைக்குமா என அவர் பலமுறை தேடியுள்ளார். இந்த நிலையில், அவருக்கு ஒரு திட்டம் தோன்றியது, தன்னைப் போலவே பிரச்சினையுடைய இன்னொருவர் இருந்தால், இருவரும் பாதணிகளை பகிர்ந்துகொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்பட, உள்ளூர் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்

சரியாக 24 மணி நேரத்திற்கு பின்னர் கால்கரியில் உள்ள பிறிதொரு பெண்ணிடம் இருந்து பதில் வந்தது. Jessica வழங்கிய விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்ட Genene என்ற பெண்ணுக்கும் அதே பிரச்சினை இருந்தமையால் இருவரும் தமது பாதணி பிரச்சினைக்கு தீர்வை கண்டுள்ளனர்.

சிறு வயதில் ஏற்பட்ட நோயால் வலது பாதம் வளர்வது நின்றுபோனதால் ஜெனினியும் பெரிதும் கவலையில் இருந்துள்ளார். அவரும் ஒவ்வொரு முறையும் பாதணி வாங்கும்போது இரண்டு ஜோடி பாதணிகளை வாங்கியுள்ளார். தன்னுடைய ‘பாத இரட்டையரை’ கண்டுபிடித்துவிட்ட நிலையில், Jessica வும், Genene யும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். நீண்டகாலமாக சேமித்து வைத்திருந்த பயன்படுத்தாத பாதணிகளை அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!