லைபீரியா நாட்டு பள்ளிக்கூடத்தில் பயங்கர தீ விபத்து – 28 மாணவர்கள் கருகி உயிரிழப்பு!

லைபீரியா நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள இஸ்லாமிய பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியில் மத பாடத்தை படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் 30 பேர் தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானதை அறிந்த அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!