இன்றைய ராசிப் பலன்கள் 29.11.2014

astrologyமேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடு வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கணவன்& மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் சந்தே கமும், மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சிலர் உங்களை குறைக் கூறினா லும் அதை பெரிதாக்க வேண்டாம். வாக் குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத் தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படு வீர்கள். வளைந்து கொடுக்க வேண்டியநாள்.

சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறி வுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமா கும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

துலாம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நட்பால் ஆதாயம் உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.

தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தை முடிக்கும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறு வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். குடும்பத்தின ரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். செரிமானக் கோளாறு, வயிற்று வலி வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மீனம்: மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். சலிப்பு, சோர்வு வந்து விலகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Tags: 

Leave a Reply