பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்துவர் என்பதை முன்பே அறிந்து எஸ்கேப் ஆன இரண்டு பேர்!

பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடும் என்பதை முன்பே இரண்டு பேர் அறிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் பல்வேறு நோய்களும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதால், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு சுற்றுவட்டார கிரமாத்தில் இருக்கும் மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. நேற்று போராட்டத்தின் 100-வது நாள் என்பதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவல முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் 20,000-க்கும் மேலான மக்கள் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதியில் திரண்டு வந்த போது, பொலிசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் மோதல் ஏற்பட்டதால், பொலிசார் திடீரென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதன் காரணமாக தற்போது வரை 11 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போராட்ட நிர்வாக குழு நிர்வாகி ஒருவர், போராட்டத்தை நீர்த்துப்போக வைப்பதற்காக, கூட்டமைப்பையே மாவட்ட நிர்வாகம் இரண்டாக பிரித்துவிட்டது. போராட்டத்தில் தீவிரவாக செயல்பட்டு வந்த பெண் ஒருவர் வியாபாரிகள் சிலரிடம் பேரணியில் வன்முறை வெடிக்கும். கட்டாயம் துப்பாக்கிச் சூடு நடக்கும். நீங்கள் எல்லாம் வியாபாரிகள். இந்த விவகாரத்தில் ஒதுங்கி நில்லுங்கள். நீங்கள் பாதிக்கப்பட்டால், நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார்.

அதன் பின்னரே வியாபாரிகள் கடை அடைப்பு எனக் கூறிக் கொண்டு மைதானத்துக்கு சென்றுவிட்டனர்.அதுமட்டுமின்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பெண்மணி ஒருவருக்கும், துப்பாக்கிச் சூடு விவகாரம் முன்கூட்டியே தெரியவந்திருக்கிறது. தன்னுடைய தலைமையில் சிலரைத் திரட்டி, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கோஷம் போட்டார். அவரையும், அவரோடு கோஷம்போட்ட சிலரையும் பொலிசார் ஒன்றும் தெரியாதது போல் தனியார் மண்டபம் ஒன்றில் அழைத்து அடைத்து வைத்துவிட்டனர்.

இதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. அதனால்தான், பேரணியில் கலந்துகொள்ளாமல், அந்த பெண்கள் விலகிக் கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் வேதாந்தாவின் கட்டளைகளின்படியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் நிச்சயம் இதற்கு அரசு பதில் கூறி ஆகவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!