சென்னையில் கணனி ஆசிரியை மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணனி அறிவியல் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார் புளியந்தோப்பு வ.உ.சி. பகுதியைச் சேர்ந்த லட்சுமி (36).
வழக்கம் போல, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, ஆகாஷ் என்ற மாணவர் திடீரென கணனியை ஆப் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனை லட்சுமி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஆகாஷ், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் லட்சுமியை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால், காது வழியால் அவதிப்பட்ட லட்சுமி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அங்கு, அவரின் காது ஜவ்வு கிழிந்து போயுள்ளதாகவும், அதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆசிரியையை தாக்கியதால், ஆகாஷை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
















