மேஷம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்நம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
ரிஷபம்
சுகங்கள் கூடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக அமைய ஆண்டவனைப் பிரார்த்திப்பீர்கள்.
மிதுனம்
இனிய மாற்றம் வந்து சேரும் நாள். சுபவிரயம் உண்டு. சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மன அமைதி பெறுவீர்கள்.
கடகம்
வரவு இருமடங்காகும் நாள். அயல்நாட்டுப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிட்டும்.
சிம்மம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு திருப்தி தரும்.
கன்னி
அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்து மறைமுகப் போட்டிகள் அகலும்.
துலாம்
காரிய வெற்றி காணக் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். திடீர்ச் செலவுகளை சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.
விருச்சகம்
தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி காணும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உதவிக்கரம் நீட்டுபவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். கொடுக்கல் – வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
மகரம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.
கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி லாபம் சம்பாதிப்பீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.
மீனம்
வளர்ச்சி கூடி வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
















