தடுப்பு மையங்கள் குறித்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடன் உடன்பாடு செய்கிறது சிறிலங்கா

தடுப்புக்காவல் மையங்கள் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவும், சிறிலங்கா அரசாங்கமும், உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சு, அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடன் இந்த உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது.

இந்த உடன்பாட்டின் மூலம், அனைத்துலக தர நியமங்களுக்கு அமைய, அபிவிருத்தி செய்யும் ஒழுங்கு தொடர்பான அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் மீளாய்வின் ஊடாக, நாட்டின் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் முறையை முன்னேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெறவுள்ளது.

இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான அனுமதியை சிறிலங்கா அமைச்சரவை வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!