சிங்கப்பூர் செல்ல கோத்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வரும் 9ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வரை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டிஏ ராஜபக்ச நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடு குறித்த வழக்கில், கோத்தாபய ராஜபக்சவின் கடவுச்சீட்டு முடக்கி வைக்கப்பட்டு, அவர் வெளிநாடு செல்வதற்கு சிறப்பு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைகளுக்காக எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வ சிங்கப்பூருக்குச் சென்று வருவதற்கு அனுமதி அளிக்கக் கோரியும், கடவுச்சீட்டை விடுவிக்க உத்தரவிடக் கோரியும் கோத்தாபய ராஜபக்ச சிறப்பு மேல்நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், 9ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வரை கோத்தாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியுள்ளதுடன் கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!