பணத்திற்கு விலைபோகும் நபர் நான் அல்ல. மனசாட்சிக்கு அமைய செயற்படும் நபர் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்த திஸ்ஸ அத்தநாயக்க, நேற்றைய தினம் ஆளுங்கட்சியில் இணைந்திருந்தார்.
பணத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தான் ஆதரவு வழங்கியதாக சிலர் குற்றச்சாட்டு முன்வைப்பதாகவும் அது பொய் எனவும் பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் அல்லது சஜித் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் இருந்ததாகவும் ஊவா தேர்தலில் ரணில் – சஜித் இணைந்ததால் வாக்குகள் அதிகம் பெற முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இன்று பொலன்னறுவையில் இருந்து வந்த குழு ஐக்கிய தேசிய கட்சியை வழி நடத்துகிறது.
தான் வழங்கிய இராஜினாமா கடிதத்தை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
அரசாங்கத்தில் இணைய திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு 20 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
















