குமார வெல்கமவின் தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் – டிலான்

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக முறையில் போட்டியிடுவதாக தீர்மானித்துள்ளமை முற்றிலும் தவறான தீர்மானமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை நியமிக்க வேண்டாம். என்று இவர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்பட தொடங்கினார். இவருக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் எவ்வித அரசியல் ரீதியிலான முரண்பாடுகளும் கிடையாது. தனிப்பட்ட பகைமையே காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட்டால் அவர் பாரிய பிண்ணடைவினை எதிர்க் கொள்ள வேண்டும். இன்றும் காலம் கடக்கவில்லை. மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியினை வீழ்ச்சி பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்க எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!