சிவில் போராட்டங்களை நடத்துவதற்கான பின்னணியை உருவாக்க இடமளிக்கக் கூடாது! – படையினருக்கு அரசாங்கம் உத்தரவு

ஆயுதம் ஏந்தி சிவில் போராட்டங்களை நடத்தவோ அதற்கான பின்னணியை உருவாக்கவோ எவ்வித சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புப் பேரவை கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவஞ்சலி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய வடக்க கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆயுத போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பது குறித்து உன்னிப்பாக கண்காணித்துள்ளது.குறித்த காலப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு நடத்தி அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

நினைவஞ்சலி நடவடிக்கைகளின் பின்னரும் சிவில் போராட்டங்களுக்கு எவ்வித இடமும் அளிக்கப்படக் கூடாது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புத் தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!