பலாலியில் தமிழுக்கு முதலிடம்- கொந்தளிக்கும் கோத்தா தரப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார மேடையொன்றில் நேற்று உரையாற்றிய விமல் வீரவன்ச இவ்வாறு “அரச மொழிக் கொள்கைக்கு அமைய, சிங்கள மொழியே பெயர் பலகைகளில் முதலில் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, யாழ். சர்வதேச விமான நிலையத்தில் முதலில் தமிழ் மொழியும் இரண்டாவதாக சிங்கள மொழியும் மூன்றாவதாக ஆங்கில மொழியும் இருப்பதாக பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மொழிக் கொள்கைகள் இல்லாது போயுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் கலாசார மற்றும் மொழித் தொன்மைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த விமான நிலையத்தின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னரிமை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், விமல் வீரவன்சவால் குறித்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!