சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெளியே நடந்து சாதனை படைத்த பெண் ஜோடி!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெளியேறி பழுது பார்த்து திரும்பி இரு பெண் விஞ்ஞானிகள் சரித்திர சாதனை படைத்துள்ளனர். விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் ஆகிய ஜோடி விண்வெளி நடைபயணத்தில் நடந்த முதல் பெண் ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் மின்சாரம் வழங்கும் சூரிய ஒளித் தகடுகளில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் இந்தப் பெண்கள் ஈடுபட்டிருந்தாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெளியே ஏற்படும் பழுதுகளை இதுவரை ஆண்களே செய்து வந்த நிலையில் முதன் முதலாக விண்வெளியில் நடந்த பெண்கள் என்ற பெருமையை கிறிஸ்டினாவும், ஜெஸிகாவும் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதமே பெண்களை விண்வெளியில் நடக்க வைக்க நடந்த முயற்சிகள் நடந்தன. ஆனால் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஜோடியினர் தற்போது அந்தப் பணியில் வெற்றி பெற்றிருப்பதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!