மருமகனின் அண்ணனை மணந்த மாமியார்… கள்ளக்காதலுக்காக விவாகரத்து செய்யப்பட்ட கணவர்… அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!!!

பஞ்சாபின் குர்தாஸ்புரில் நடந்துள்ள விநோதமான திருமண சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் 37 வயதான பெண்மணி ஒருவர், தனது 18 வயது மகளை 21 வயதான ஒருவருக்கு அண்மையில் மணம் முடித்து தந்திருக்கிறார். அந்த இளம் ஜோடிகள் இப்போதுதான் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கிய நிலையில், அந்த பெண்ணின் அம்மா செய்துள்ள காரியத்தால் பெரும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஆம், அந்த பெண்ணின் அம்மா, தனது மகளின் கணவருக்கு அண்ணனான 22 வயது நபரை, தனது வாழ்க்கைத் துணைவராக தேர்ந்தெடுத்திருப்பதுதான் அந்த சம்பவம். அதோடு அந்த பெண்மணி, மருமகனின் அண்ணன் மீது காதலில் விழுந்ததால் தன் கணவரையே விவாகரத்து செய்துவிட்டு, தன்னை விட 15 வயது சிறுவயதுடைய மருமகனின் அண்ணனை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் இவர்களின் காதல் விவகாரம் அப்பெண்மணியின் மகளுக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இதனால் மொத்த குடும்பமும் இவர்கள் இருவரையும் எதிர்க்க, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென இருவரும் நீதித்துறையை அணுகியுள்ளனர். இந்த வழக்கு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. அண்ணன், தம்பி இருவரையும் முறையே அம்மா, மகள் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் கல்ஃப் செய்தி இதழில் வெளியானதை அடுத்து பெரும் சலனத்தை உண்டுபண்ணியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!