மைத்திரியை அவசரமாகச் சந்தித்த மகிந்த!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நேற்றிரவு அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி செயலகத்தில்இந்த கலந்துரையாடல் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கான ஆதரவு அதிகரித்து வருகின்றமை குறித்து புலனாய்வுத்துறை மற்றும் ஏனைய தரப்பினர் தகவல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ஸவிற்கு மேலதிக பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!