நீதிமன்ற அவமதிப்பு – ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை மன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, நீதிமன்ற கட்டளையை அவமதித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரரையும், ஏனைய மூவரையும் வரும் நொவம்பர் 8ஆம் நாள் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், சிறிலங்கா அதிபரினால் அவர் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!