பரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி

பங்­க­ளா­தேஷைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் தனக்­காக பட்­டப்­ப­டிப்பு பரீட்­சை­களை எழுதுவதற்கு 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­தி­யி­ருந்­தமை அம்­ப­ல­மா­ன­தை­ய­டுத்து அவர் பல்­க­லை­க்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்­டுள்­ள­தாக பல்க­லைக்­க­ழக உத்­தி­யோ­கத்­தர்கள் தெரி­விக்­கின்­றனர்.

திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலை­மாணி பட்­டப்­ப­டிப்பை தொடர்ந்து வந்த ஆளும் அவாமி கட்­சியைச் சேர்ந்த பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தமன்னா நுஸ்­ரத்தே இவ்­வாறு தனக்­காக பரீட்­சை­களை எழுத பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­தி­யுள்ளார்.

கடந்த சனிக்­கி­ழமை நர்­ஸிங்டி அர­சாங்கக் கல்­லூரி பரீட்சை மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பரீட்­சையின் போது மேற்­படி பதி­லாட்­களில் ஒரு­வரை தொலைக்­காட்சி சேவை­யொன்று எதிர்­கொண்டு தகவல் வெளியிட்­ட­தை­ய­டுத்தே இந்தப் பரீட்சை மோசடி அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது. தமன்னா பங்­க­ளாதேஷ் பாரா­ளு­மன்­றத்தில் பெண்க­ளுக்காக ஒதுக்­கப்­பட்டுள்ள 50 ஆச­னங்களில் ஒன்றை பெற்­றுள்ளார்.

இதுதொடர்பில் இந்த மோச­டியை அம்பலப்படுத்­திய பங்களாதேஷின் நகோறிக் தொலைக்­காட்சி சேவை தெரிவிக்கையில், கடந்த 4 தவணைகளுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் 13 பரீட்சைகள் இடம்பெற்றுள்ள போதும் அந்தப் பரீட்சைகள் எதற்கும் தமன்னா ஆஜராகியிருக்கவில்லை எனக் கூறுகிறது.

இந்நிலையில் தமன்னாவின் பல்கலைக்கழகத்திலான பதிவை இரத்துச் செய்துள்ளதாகவும் அவருக்கு பல்கலைக்கழகத்தில் பரீட்சை எதனையும் எழுத அனுமதிக்கப்படாது எனவும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மான்னன் தெரிவித்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாக சபையானது மேற்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதனையும் எடுப்பதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தமன்னா 2001 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலொன்றில் கொல்லப்பட்ட டாக்காவின் நர்ஸிங்டி பிராந்தியத்தின் மேயரான லோக்மான் ஹொஸைனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!