முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் சஜித்துக்கு ஆதரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சருமான குணரத்ன வீரக்கோன், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காலியில் நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்க முடிவு செய்ததை அடுத்து, அந்தக் கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பலரும் ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!