குறைபாடுகளுடன் பிறந்த குழந்தை..கோபத்தில் தாய்…?

கர்ப்பமாக இருக்கும்போது, முறையாக பல முறை ஸ்கேன் எடுத்த பின்னரும், குழந்தை பிறந்தபோது அதற்கு கண்கள், மூக்கு, மண்டையோட்டில் பாதி இல்லாமலிருந்ததைக் கண்ட குழந்தையின் தாய் கடும் கோபமடைந்துள்ளார்.போர்ச்சுகல்லைச் சேர்ந்த Marlene Simãoவும் அவரது கணவர் David Ribeiroவும் தங்கள் மகனைக் காண ஆவலாகக் காத்திருந்தார்கள்.ஆனால் Rodrigo என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை பிறந்தபோது, அவனுக்கு கண்களும், மூக்கும் இல்லாததைக் கண்டு அந்த பெற்றோர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

அத்துடன் அவனது மண்டையோட்டில் ஒரு பகுதியும் இல்லாமலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.Marlene கர்ப்பமாக இருந்தபோது, முறையாக மூன்று முறை ஸ்கேன் எடுக்கப்பட்டபோதும், தாய் சேய் நல மருத்துவரான Artur Carvalho என்பவர் தொடர்ந்து அந்த குழந்தை நல்ல நிலைமையில் இருப்பதாகவே கூறிவந்துள்ளார்.

கடைசியாக ஒரு 5-D ஸ்கேன் எடுக்கப்பட்டபோது, குழந்தைக்கு ஏதோ பிரச்னை இருப்பதைக் கண்ட Marlene, அது குறித்து மருத்துவரிடம் தெரிவித்தபோது, அவர் இந்த ஸ்கேன்கள் எல்லாம் முற்றிலும் சரியாக இருக்காது என்று கூறி, அப்போதும் குழந்தை நன்றாக இருப்பதாகவே தெரிவித்துள்ளார்.ஆனால், குழந்தை பிறந்தபோது அது பல குறைபாடுகளுடன் பிறந்ததைக் கண்டு அதிர்ந்த அதன் பெற்றோர், கோபமடைந்து மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.மருத்துவர் Artur ஆறு மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் மீது வழக்கு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!