சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியுள்ள ஜப்பான் அதில் பணியாற்றுவதற்கு எட்டு கடலோரக் காவல் படையினருக்குப் பயிற்சிகளை அளித்துள்ளது.

சிறிலங்காவின் கடல் கண்காணிப்பு ஆற்றலை பலப்படுத்தும் நோக்கில் ஜப்பான், 30 மீற்றர் நீளமான இரண்டு ரோந்துப் படகுகளை அண்மையில் வழங்கியது.

இந்த படகுகளில் பணியாற்றவுள்ள எட்டு கடலோரக் காவல் படையினருக்கு ஜப்பானில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

ரோக்கியோவில் கடந்த மே 7ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!