மனைவியிடமிருந்து கள்ள காதலியை காப்பாற்ற போராடிய கணவன்…?

சீனாவில் நடுரோட்டில் ரகசிய காதலியுடன் கையும் களவுமாக சிக்கிய கணவனை சினிமாவில் வருவதுபோல், ஒரு மனைவி அடித்துத் துவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.காதலியுடன் சிக்கிய அந்த நபரை, அவரது மனைவியும் அவரது தோழியரும் அடித்து உதைக்கின்றனர்.இந்த அவமானம் போதாதென்று அந்த பெண், தன் கணவனின் காதலியின் சட்டையை வேறு கிழித்து அவமானப்படுத்துகிறார்.

ஆனால், அந்த மனைவி அத்தனை முறை அடித்தும், காலால் உதைத்தும், ஒரு அடி கூட தனது காதலி மீது விழாதபடி, அவள் மீதே விழுந்து அவளை பாதுகாத்துக் கொள்கிறார் அந்த கணவர்.கடைசியில், யாராவது பொலிஸாரைக் கூப்பிடுங்கள் என்கிறார் அந்த கணவர். சீனாவைப் பொருத்தவரை, திருமணத்துக்கு வெளியில் உறவு வைத்துக்கொள்ளும் குற்றங்களுக்கு தண்டனை கிடையாது.

ஆகவே, அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்பதுபோல, மனைவிமார்களே இப்படி நடு ரோட்டில் தாக்குதலில் இறங்கிவிடுகிறார்கள்.அப்படியே இதுபோன்ற சம்பவங்களில் யாராவது கைது செய்யப்பட்டால் கூட, சில நாட்கள் காவலில் வைக்கப்படுவது போன்ற தண்டனைகளே கிடைப்பதால், மனைவிமார்களே உறவினர்கள் உதவியுடன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!