நாட்டுக்குத் திரும்பினால் கொன்றுவிடுவார்கள் .. இரண்டு வாரங்களாக மணிலா விமான நிலையத்திலேயே வாழும் மிஸ் ஈரான் அழகி…!

ஈரானில் அழகிப்போட்டியில் வென்ற இளம்பெண் ஒருவர், நாட்டுக்குத் திரும்பினால் கொன்றுவிடுவார்கள் என்று பயந்து மணிலா விமான நிலையத்திலேயே இரண்டு வாரங்களாக வாழ்ந்து வருகிறார்.2018ஆம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில் ஈரான் சார்பில் பங்கேற்ற மிஸ்.ஈரான் படம் பெற்ற Bahareh Zare Bahariயை (31)ஈரானுக்கு நாடு கடத்தும்படி அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளநிலையில், அவர் மணிலா விமான நிலையத்திலேயே இரண்டு வாரங்களாக தங்கியுள்ளார்.

அவர் மீது பிலிப்பைன்சில் இருக்கும்போது, ஈரான் நாட்டவர் ஒருவரை தாக்கப்போவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதன் காரணமாக, அவர்மீது இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதையடுத்து, அவர் பிலிப்பைன்சுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தான் 2014இலிருந்து பிலிப்பைன்சில் வாழ்ந்து வருவதாகவும், அப்படியிருக்கும் நிலையில் தன் மீது எப்படி ஈரானில் ஒரு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ள Bahari, தன் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என்றும், தனது அரசியல் பார்வை மற்றும் பெண்கள் உரிமைக்காக போராடுதல் ஆகிய காரணங்களுக்காக தான் குறிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார்.தன்னை ஈரானுக்கு நாடு கடத்தினால், தன்னை கொன்றுவிடுவார்கள் என்று கூறும் Bahari, ஏன் நான் இவ்வளவு நாட்களாக இந்த விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கூட யாரும் கூற மாட்டேன்கிறார்கள் என்று கண்ணீர் வடிக்கிறார்.

விமான நிலையத்தில் உள்ள பயணிகள் அறை ஒன்றிலேயே அடைந்து கிடக்கும் தான், மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுபோல் உணர்வதாக தெரிவிக்கிறார்.ஆனால், பிலிப்பைன்ஸ் நீதித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், எங்கள் நாட்டில் எந்த சட்டத்தையும் Bahari மீறவில்லை, அதனால் அவரை எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்க எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.அத்துடன், Bahari கூறுவதுபோல, அவரை உடனடியாக நாடு கடத்தப்போவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என்றும், அவர் பிலிப்பைன்சில் புகலிடம் கோரியுள்ளதால், அவரை ஈரானுக்கு திருப்பி அனுப்ப இயலாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!