2050-ம் ஆண்டுக்குள் மும்பை நகரம் நீரில் மூழ்கும் அபாயம்..!

அதிகரித்து வரும் கடல் மட்டத்தால், 2050க்குள் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கிவிடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செயற்கைகோள் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் நியூஜெர்சியில் உள்ள ஒரு ஆய்வு மையம் புதிய ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2050ம் ஆண்டுக்குள் கடற்கரையோர நகரங்களில் வாழும் சுமார்15 கோடி மக்களின்((150 மில்லியன்)) வசிப்பிடம் நீரில் மூழ்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வியாட்நாமின் ஹோ சி மின் நகரம், தாய்லாந்தின் பாங்காக், சீனாவின் ஷாங்காய், இந்தியாவின் மும்பை நகரம் ஆகியன கடல் நீரில் மூழ்கிவிடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பொருளாதார ஸ்திரமற்ற நிலை உருவாகவும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல்களை கொண்டு, கடலோர நகரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்த்தவும் ஆய்வு கட்டுரையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!