வெற்றி பெறமுடியாததாலேயே 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருகிறது ஜேவிபி! -கம்மன்பில

சட்டம் அறியாத குழந்தைகளை, நாட்டின் அரசமைப்புடன் விளையாட இடமளிக்க முடியாது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

‘ மக்கள் விடுதலை முன்னணியினரால் (​ஜே.வி.பி) கொண்டு​வரப்படும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை, நாம் முழுமையாக எதிர்க்கிறோம். இந்தத் திருத்தம், எந்த அடிப்படையில் சமர்பிக்கப்பட்டுள்ளதென்பது குறித்து, நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளோம்.

நாட்டின் சட்டம் அறியாத குழந்தைகளுக்கு, அதனை விளையாட்டுப் பொருளாக்கிக் கொள்ள இடமளிக்க முடியாது. மக்கள் விடுதலை முன்னணியானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பங்களில், 4 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை என்றுமே பெற்றுக்கொண்டதில்லை. என​வே, அக்கட்சிக்கு ஜனாதிபதித் தேர்தல் பெரும் இடையூராக அமைந்துள்ளது. அதனாலேயே, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்றும், உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!