நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் தோல்வியை நோக்கி செல்லக் கூடாது – ஜனாதிபதி

நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் தோல்வியை நோக்கி செல்லக் கூடாதென குறிப்பிட்ட ஜனாதிபதி இன்று நிறைவேற்ற முடியாமல் போனவை நாளை நாட்டுக்கா கவும் மக்களுக்காகவும் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

”எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளித்தல் மற்றும் நன்மைகளை பகிர்ந் தளிக்கும் நிகழ்வுகள் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றன. பொலன்னறுவை பொது வைத்தியசாலையை திறந்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு முக்கியத்துவமளிப்பதைப் போன்று பொலன்னறுவை அபிவிருத்தியில் தனது முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் இன்று பெறுபேறுகளை தந்து கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலன்னறுவை அபிவிருத்திக்கு தனக்கு அனைவரிடமும் இருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு நாட்டுக்காக முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் கிடைத்திருக்குமானால் இன்று முழு நாட்டிலும் பல விரிவான மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி சுதந்திரம், ஜனநாயகம், ஊடக சுதந்திரத்துடன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முக்கியமான பணிகளை தனது ஐந்து வருட பதவிக் காலத்தில் மேற்கொள்ளக் கிடைத்தபோதும் நாட்டுக்காகவும் மக்களுக் காகவும் வைத்திருந்த எதிர்பார்ப்புகளை இறுதி வரை கொண்டு செல்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனது கொள்கைகளுக்கு, பொருத்தமான கருத்துக்களுக்கு உடன்பாடானவர்கள் பொறுப்புக்களை வகித்தால் கடந்த ஐந்து வருடகாலப் பகுதியில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இதனைப் பார்க்கிலும் அதிகமான பணிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருந்திருக்குமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

97 மில்லியன் ரூபாவிற்கும் அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை புதிய பொலிஸ் அலுவலகமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் ஹசினி வாசனா செவ்வந்தி என்ற மாணவியின் “மண்கட ரூ ரடா 2019” கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டு விழாவிலும் ஜனாதிபதி பங்குபற்றினார்.

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் தரம் 09 இல் கல்விகற்கும் ஹசினி வாசனா செவ்வந்தி என்ற மாணவிக்கு ஜனாதிபதி புதிய வீடொன்றை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாணவியினால் எழுதப்பட்ட 12 சித்திரக் கதைப் புத்தகங்களும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அகில இலங்கை பளு தூக்கும் போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரியின் மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

அதிபர் ரவிலால் விஜேசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொலன்னறுவை சீவலி முன்மாதிரி கனிஷ்ட பாடசாலையின் விசேட கல்வி பிரிவுக்காக நிர்மாணிக் கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறைக் கட்டடத்தையும் ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதற்காக 7.9 மில்லியி்ன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

63 மில்லயின் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதுருவெல நான்கு மாடி தபால் கட்டடத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தி பணிகளையும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.

அந்த வகையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் புதிய கண் சிகிச்சை பிரிவு, விளையாட்டு, வைத்திய, உடற் சுகாதார மத்திய நிலையம், விசேட வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி, 120 கட்டில்களை கொண்ட புதிய சத்திர சிகிச்சை வாட்டுத் தொகுதி, 120 கட்டில்களைக் கொண்ட புதிய வாட்டுத் தொகுதி, திடீர் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதி மேலும் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், விசேட வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

வெளி நோயாளர் பிரிவில் வைத்தியசாலை, சுகாதார, தகவல் முகாமைத்துவ முறைமையையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். அப்பிரிவின் பதிவு நடவடிக்கைகள் மற்றும் முதலாவது சுகாதார தகவல் அட்டை ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் Digital Customer Satisfaction மதிப்பாய்வு முறைமையும் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாக தகவல் பரிமாற்றமும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் நூலக தன்னியக்க முறைமையை முன்னெடுத்தல், வைத்தியசாலையின் சுகாதார தகவல் முறைமையை E Channeling சேவையுடன் இணைப்பதும் இடம்பெற்றது.

ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!