ரெலோ, புளொட் ரணிலைச் சந்திக்கவில்லை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் தலைவர் த.சித்தார்த்தனும், மறுத்துள்ளனர்.

நேற்று முன்தினம், இவர்கள் அலரி மாளிகைக்கு சென்று சிறிலங்கா பிரதமரைச் சந்தித்ததாக, செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், தாங்கள் ரணில் விக்ரமசிங்கவைச் சென்று சந்திக்கவில்லை என்றும், அந்த செய்தி தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தம்முடன் தொலைபேசியில் பேசினார் என்றும், இதுகுறித்து ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பேசுவதாக கூறினார் என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!