கோத்தாவே பெண்களுக்கு உயரிய பாதுகாப்பை வழங்குவார் – சரத் அமுனுகம

நாட்டில் பெண்களுக்கான உயர்ந்தபட்ச பாதுகாப்பைப் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்க்ஷவினால் மட்டுமே வழங்க முடியும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை சமூகத்தில் பெண்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பெண்களே பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். மக்கள் விடுதலை முன்னணி போராட்ட காலத்தின் போதும் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதும் பல ஆண்கள் உயிரிழந்ததுடன் இலங்கையில் பெண்களே அதிக அளவில் காணப்படுகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் கிராமப்புற சுகாதார நிலை மேம்பாடடைந்ததன் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 27 ஆவது பக்கத்தில் பெண்களின் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வன்முறை நிலவிய போது அதனது தாக்கம் பெண்கள் மீதானதாகவே காணப்பட்டது. நாட்டில் பிரச்சினை தொடங்கிய போது மக்கள் விடுதலை முன்னணி காலத்தில் ஆறாயிரம் ஆண்கள் கொல்லப்பட அதனுடைய நேரடி தாக்கம் பெண்களாகிய தாய்க்கும் மனைவிக்கும் சகோதரிக்கும் சென்றடைந்தது.

இதேநிலை வடக்கு கிழக்கில் யுத்தம் நிலவிய போது உயிரிழந்த படை வீரர்களின் மனைவி , தாய் , சகோதரி பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள் நாட்டில் இடம்பெற்ற அந்த கொடூர யுத்தத்தை நிறுத்திய பெருமை ராஜபக்க்ஷ சகோதரர்களையே சாரும் இதனை முன்னிறுத்தியே ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ களமிறங்கியுள்ளார்.

பெண்களுக்கே இக் காலகட்டத்தில் ஆண்களால் இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமை பாலியல் துஷ்பிரயோகங்களும் பாலியல் தொல்லைகளும் ஆகும். தெருக்களில் செல்லும் போதும் பொதுப் போக்குவரத்தில் பிரயாணம் மேற்கொள்ளும் போதும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாகின்றனர்.

இதனை முறைப்பாடாகத் தெரிவிக்க பெண்கள் எமது சமூகத்தின் அடிப்படியில் முன்வருவதில்லை எனவே இங்குத் தவறிழைத்த ஆண் தப்பிச் செல்வதற்குப் பெரிதும் காரணமாகி விடுகிறது இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் பாலியல் தொல்லைகளுக் கும் உள்ளாகும் பெண்கள் தமது கையடக்க தொலைப்பேசி மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வேறு எந்த ஜனாதிபதி வேட்பாளரும் பெண்கள் குறித்து அவர்களது பிரச்சினைகள் பற்றி நிபுணர்களை நியமித்து அலசி ஆராய்ந்து சிறந்த தீர்வாக கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!