முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பை வழங்ககூடிய கோத்தாபயவிற்கே எங்களின் ஆதரவு – பைசர் முஸ்தபா

2015 தொடக்கம் இலங்கையில் முஸ்லீம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அதற்கு தீர்வாக எதிர்வரும் ஜானதிபதி தேர்தலில் கோத்தாபயாவிற்கு முஸ்லிம்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் அணைத்து முஸ்லீம்களுக்கும் தீவிரவாத பட்டத்தை சூட்டி விட்டார்கள்.

இதனை கருத்தில் கொண்டு எமக்கான சரியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். பேருவளை முன்னாள் நகரசபை தலைவர் மில்பர் கபூர், சட்டத்தரணி ராசிக் சறுக் , அக்குரணை பிரதேச சபை தலைவர் இப்திகார் உட்பட மேலும் பலர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த பைசர் முஸ்தபா கூறியதாவது,

நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்து நான்கரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கான எவ்வித நன்மைகளும் இடம்பெற்றதாக தெரிய வில்லை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அனைத்து முஸ்லிம்களுக்கும் தீவிரவாதிகள் என்று பட்டமளித்து விட்டார்கள். முஸ்லிம் மக்கள் என்றால் அனைவராலும் மதிக்கக்கூடிய ஒரு நிலைமை காணப்பட்டது அதனை இல்லாதொழித்து விட்டது இந்த அரசாங்கம் இதனை மாற்றியமைக்க வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து நாட்டுக்கான ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

முஸ்லிம் மக்கள் தற்போது தெளிவுடன் இருக்கின்றனர், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பெண்கள் தங்களின் பாதுகாப்பை இழந்துளளனர், சுதந்திரமாக ஆடைகளை அணிந்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரி அதிகரிப்பின் மூலம் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். அரசியல் வாதிகளின் தங்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு அரசியல் நடத்துகின்றனர் மக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடுங்கள், தேசிய சிந்தனையை கருத்தில் கொண்டு செயலாற்றக் கூடிய எங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுப்போம்.

நாங்கள் எந்த அரசியல் வாதிக்கும் எதிரானவர்கள் அல்ல அரசியலில் ஈடுபட அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய கூடிய கோத்தாபயவிற்கு மக்கள் ஆதரவினை வழங்கி எதிர் காலத்திற்கு சிறந்த ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!