சாணக்கியம் – நயவஞ்சகம்: மெல்லியபிரிகோட்டின் ஒவ்வாமுனைகள்

ஒத்த முனைகள் ஒன்­றை­யொன்று உதைக்கும். ஒவ்­வா­மு­னைகள் ஒன்­றை­யொன்று கௌவும். இந்தக் காந்த விதி சம­கால அர­சியல் மற்றும் சமூக இயங்­கியல் ஒழுங்கில் எவ்­வாறு வாய்ப்புப் பார்க்­கப்­ப­டு­கின்­றது என்­பது ஆழ்ந்து சிந்­திக்­கத்­தக்­க­து

Student Teachers எனப்­படும் ஆசி­ரியப் பயி­லு­னர்­களின் தலை­யெ­ழுத்து சில­வே­ளை­களில் எனது உள­வியல் விரி­வு­ரை­க­ளுக்கும் சமூ­க­ம­ளித்­தா­க­வேண்டிய நிலை­யை அவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது. மாறாக, அந்த மாணவர் அணியில் அதி­ வி­வே­க­மான சில ஆளு­மைக்­கூ­றுகள் இருந்­தமை என்­னு­டை­ய­து­மான தலை­யெ­ழுத்தாய் இருக்­கவும் கூடும்.

தனியாள் வேறு­பாடு -Individual differences என்ற ஓர் அல­குக்­கான விரி­வுரை அன்று திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. வகுப்­பறை முகா­மைத்­து­வத்தின் தந்­தி­ரோ­பா­யங்­களைத் தனியாள் வேறு­பாட்­டி­லி­ருந்து உரு­வாக்­குதல் என்ற உப அலகில் நான் பேசிக்­கொண்­டி­ருந்தேன்.

அந்த பயி­லுனர் தொகு­தி­யி­லி­ருந்த அதி­வி­வேகம் கொண்ட ஆசி­ரிய பயி­லு­னர்­களுள் ஒருவர் எழுந்தார். இந்த இடத்தில் சாணக்­கியம் என்ற பதப் பிர­யோ­கத்­துக்கும் நய­வஞ்­சகம் என்ற பதப் பிர­யோ­கத்­துக்கும் இடை­யே­யுள்ள உள­வியல் பிரி­கோடு எது­வென்­பது என்னை நோக்­கிய அவரின் யதார்த்­த­மான வினா­வே.

நான் என்னை சுதா­க­ரித்துக் கொண்டேன். அந்த மாண­வ­ரிடம் உங்­க­ளுக்கு தரப்­பட்ட ஒரு பரீட்சை வினாத்­தாளில் அப்­பா­டத்தில் ஆகக்­கு­றைந்த சித்­திக்­கான புள்­ளிகள் எத்­தனை என நான் வின­வினேன். நாற்­பது புள்­ளிகள் என்­றனர் மாண­வர்கள் அனை­வரும் ஒரு­மித்த குரலில்.

இப்­போது எக்ஸ் என்ற மாணவன் முப்­பத்­தேழு புள்­ளி­களைப் பெற்­றுள்ளான். அவ­னுக்கு நாற்­ப­தாகக் கூட்­டி­யாக வேண்­டு­மென்­பது பரீட்­ச­கரின் மனோ­நிலை. ஆனால், அதனை அவர் நியா­யப்­ப­டுத்­தி­யாக வேண்­டிய தேவை­யி­ருந்­தது. ஏனெனில் புள்­ளி­யிடப்­பட்ட விடைப்­பத்­திரம் மாண­வர்­களின் பார்­வைக்­காக பரீட்சை முடி­வ­டைந்த பின்னர் கொடுக்­கப்­பட்­டாக வேண்டும் என்­பது பீடா­தி­ப­தியின் மீற­மு­டி­யாத உத்­த­ரவு. ஆகவே, Justification நிறைந்த ஒரு சாணக்­கி­ய­மான மீள்பார்வை மதிப்­பீட்டில் ஈடு­படும் ஆசி­ரி­ய­ருக்கு அவ­சியம் ஏற்­படும். இல்­லா­து­போயின் மாண­வர்­க­ளி­டையே அவ­ருக்கு சங்­க­டமும் அவ­மா­னமும் நிகழும்.

குறித்த அந்த மீள்­பார்­வை­யின்­போது மாண­வ­ருக்குச் சார்­பான நோக்கில் சில வினாக்­க­ளுக்கு தலா ஒரு புள்ளி வீதம் மூன்று புள்­ளிகள் கூட்­டப்­பட்டால் அம்­மா­ணவன் சித்­தி­ய­டைவான்.

ஆனால், வை என்ற ஒரு மாணவன் இரு­பத்­தைந்து புள்­ளி­க­ளையே பெற்­றி­ருந்தான். அவ­னுக்கு நாற்­பது புள்­ளி­களை வழங்­கு­வதன் மூலம் சித்­தி­ய­டையச் செய்­வித்து National Diploma in Teaching கொடுக்கும் விரி­வு­ரை­யா­ளரை சாணக்­கி­ய­மா­னவர் என­லாமா அல்­லது நய­வஞ்­சகர் என­லாமா என்றேன். பலர் நய­வஞ்­சகர் என்­றனர்.

ஆனால், வினாத்­தொ­டுத்த மாண­வரை பெயர் சொல்லி அழைத்து நீங்கள் என்ன சொல்­கின்­றீர்கள் என்றேன். முன்­னை­ய­வரை சாணக்­கியர் என்று நிறுவ இந்த உதா­ரணம் பொருந்தி வரு­கின்­றதா என்று மீண்டும் என்னை நோக்கி அவர் வினாத் தொடுத்தார். ஒத்த முனைகள் ஒன்­றை­யொன்று உதைப்­பதைக் கண்­டு­கொண்ட நான் மேலும் சுதா­க­ரித்­துக்­கொண்டு, இரண்­டா­மவர் நய­வஞ்­ச­க­ மா­னவர் என்­பதை புரிந்­து­கொள்ள முடி­கின்­ற­தல்­லவா எனக் கேட்டேன். அந்தப் பயி­லுனர் ஆம் என்­று­விட்டு பின்னர் மீண்டும் தன் திருப்­தி­யீ­னத்தை வெளிக்­காட்ட, ஆனால்.. என்று இழுத்தார்.

அந்த ஆனால் என்ற இழு­வையில் ஆயிரம் அர்த்­தங்கள் பொதிந்­தி­ருந்­தன. சாணக்­கியம் இதை­விட ஆழ­மா­னது என்­பதும் அது நய­வஞ்­சகம் என்ற பதத்­துக்­கான உள­வி­யல்சார் எதிர்ச்சொல் அல்ல என்­ப­துமே அந்த ஆசி­ரியப் பயி­லு­னரின் கருத்­தாக இருந்­தி­ருக்கும். அத்­துடன் அதனை மன­சாட்­சி­யுடன் பேசு­ப­வர்­களால் மட்­டுமே நிறு­வ­மு­டியும் எனவும் அவர் கூறி­ய­தாக நான் புரிந்து கொண்டேன்.

அப்­போது விரி­வுரை நேரம் முடிந்­ததால் எனது Quality in Educational Leadership க்கு மேல­திக சேதாரம் எதுவும் அப்­போ­தைக்கு ஏற்­ப­ட­வில்லை. மறு­தினம் அவரை நான் முழு ஆயத்­தத்­துடன் சென்று திருப்­திப்­ப­டுத்­தினேன்.

மேற்­படி வகுப்­ப­றையில் நடந்து முடிந்த சம்­ப­வ­மான அந்த உதா­ர­ணத்தின் மூலம் நாம் கவ­னிக்க வேண்­டி­யது இந்த இரண்டு சொல்­லா­டல்­க­ளிலும் உள்ள பிரி­கோ­டா­னது மிகவும் மைக்ரோ நிலையில் உள்­ளது என்­ப­தையும், அதனை பிறர் புரிந்­து­கொள்ளச் செய்­வது என்­பது மிகச் சிக்­க­லானது என்­ப­தை­யுமே. அத்­துடன் ஒவ்வா முனை­க­ளான அந்தப் பிரி­கோட்டின் இரு­வேறு அந்­தங்­களும் ஒன்­றை­யொன்று கௌவி, ஒன்றின் பார்­வையை மற்­றது மறைத்­து­விடக் கூடி­யது என்­ப­து­மாகும்.

மேலும் இதனை ஒரு மெல்­லிய பிரி­கோடு பிரிக்­கின்­றதே தவிர சந்­தர்ப்­பத்தைப் பொறுத்து சாணக்­கியன் நய­வஞ்­ச­க­னா­கவும் பர்க்­கப்­ப­டலாம் என்­பதும் இங்கு பிர­தா­ன­மாக வலி­யு­றுத்­த­த்தக்­க­தாகும். அதனால் மனச்­சாட்­சி­யுடன் கூடிய ஒரு சாணக்­கியன் சந்­தர்ப்ப நிர்ப்­பந்­தத்தால் நய­வஞ்­ச­க­னாகப் பார்க்­கப்­படும் சமூக உள­வி­யலில் இங்கு ஏரா­ள­மாக நிறைந்து காணப்­ப­டு­கின்­றது என்­பதும் நாம் புரிந்­து­கொள்ள வேண்­டிய உண்­மை­யே.

இன்­றைய சமூக அர­சி­யலில் இவ்­விரு பதப் பிர­யோ­கங்­க­ளுக்­கு­மான வெளிப்­ப­டை­யான அர்த்­தத்தை இன்­றைய தலை­மு­றை­யினர் புரிந்­து­கொள்ள வேண்­டு­மாயின் கடந்த 2015ஆம் ஆண்டில் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு ஒரு முறை நாம் பின்­னோக்கி நகர்தல் வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் வெற்­றி­ய­டைந்­த­வரால் தரப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளையும் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்­டு­களின் பின்னர் அதே நபரால் நடத்தி முடிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளையும் எண்ணிப் பார்க்­கையில் நாம் அதனை உணர்ந்­து­கொள்ள முடியும்.

முதலும் கடை­சி­யு­மாக இம்­முறை மட்­டுமே ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு நிற்­கின்றேன் என்­றவர் இரு ஆண்­டுகள் கடந்த நிலையில் மீண்டும் அத்­தேர்­தலில் தான் போட்­டி­யி­ட­வேண்டும் என்­ப­தற்­காக அவர் செய்த அத்­தனை தெப்­பி­ராட்­டி­யங்­க­ளையும் நாம் எண்­ணிப்­பார்க்­கையில் நய­வஞ்­ச­கத்தின் வெளிப்­ப­டை­யான இலக்­க­ணத்தைப் புரிந்­து­கொள்ள முடியும்.

நய­வஞ்­ச­கனின் மற்­றுமோர் இலக்­கணம் அவர் செய் நன்றி கொன்ற மகர் என மக்­க­ளுக்கு தெரி­ப­டுவார் என்­ப­தாகும். இக்­கூற்­றா­னது வள்­ளுவர் கூறி­ய­து. இத­னை­விட ஒரு நய­வஞ்­ச­கனின் சாமுத்­தி­ரிகா லட்­ச­ணத்தை வேறெந்த அறி­ஞனும் கூறி­விட முடி­யாது. அந்தக் கூற்­றுக்கு அப்­ப­ழுக்­கில்­லாத இலக்­கண சுத்­த­மான புரு­ஷ­ராக நாம் இன்­றைக்கு ஜனா­தி­பதி என்ற அப்­ப­த­வியில் இருப்­ப­வரை காண­மு­டியும். ஒரு காலத்தில் பாமரப் பொது­மக்­களால் பெரும்­பாலும் அறி­யப்­ப­டா­ம­லி­ருந்த ஒரு­வரை முன்னாள் ஜனா­தி­பதி ஒருவர் தன்னால் முடிந்த அத்­த­னை­யையும் செய்து 2015ஆம் ஆண்­டுக்­கான பொது வேட்­பா­ள­ராக்­கினார்.

எல்லாம் வல்ல ஜனா­தி­ப­தி­யாக இருந்த மதி­நுட்­பமும் அர­சியல் திட­காத்­தி­ரமும் வாய்ந்த ஒரு­வரை அவரின் பல­வீ­னங்­களின் பின்­னாலே சென்று அவரை மண் கவ்வச் செய்து விலா­சமே இல்­லா­தி­ருந்­த­வரை ஜனா­தி­ப­தி­யாக்­கினார் அந்த முன்னாள் ஜனா­தி­ப­தி­யான பெண். ஆனால், இரண்டு ஆண்­டு­களின் பின்னர் இந்தப் புதிய ஜனா­தி­ப­தியை தங்­களின் ரா­ஜாங்­கத்தை மீட்கும் கபட நோக்­குடன் அண்டிக் கெடுக்க முன்னாள் உயர் கல்வி அமைச்சை அலங்­க­ரித்­தவர் முயற்­சியை மேற்­கொண்டார். அத்­த­கை­ய­வர்­களின் கப­ட­மான புத்­தி­சா­லித்­த­னத்தை ஊகித்­த­றிய முடி­யாத ஒரு பேதை­யாக புதிய ஜனா­தி­பதி அப்­போது நடந்­து­கொண்டார். இதுதான் அடுத்த முறை­யிலும் ஜனா­தி­பதிக் கதி­ரையில் அமர வேண்டும் என்ற பேராசை விளை­வித்த புத்­தி­சா­லித்­த­ன­மே.

தன்னை ஜனா­தி­பதி கதி­ரையில் அம­ர­வைத்து அழ­கு­பார்த்த அந்த அம்­மை­யா­ரையே சந்­திக்க முடி­யாது என நிரா­க­ரிக்கும் அள­வுக்கு அவரின் சிரசில் ஓர் ஒளிவட்­ட­மாக நய­வஞ்­சகத் தன்மை வெளிப்­ப­டை­யா­கவே பிர­கா­சிக்­கி­றது.

மீண்டும் அந்த சிங்­கா­ச­னத்தின் மீது அமரும் ஒரு பேராசை அவரின் அன்­றைய எதி­ரி­க­ளாயும் இடைக்­கா­லத்தில் நண்­பர்­க­ளாயும் வந்து போன­வர்­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த பாழாய்ப்­போன ஒரு வாத்­ஸல்­யத்தை உள்­வாங்கி தன்­னு­டைய பேதமை நிறைந்த தலைக்­கி­றுக்­கினால் தான் யாராக இருந்தேன் என்­ப­தையும் மறந்த பர­வச நிலையில் அவர் ஆனந்தக் கூத்­தா­டினார்.

ஒரு நாட்டின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை தம் கைவசம் வைத்­துள்ள ஓர் அர­சியல் தலை­மை­யா­னது எப்­ப­டி­யெல்லாம் புத்­திக்­கூர்­மை­யற்­ற­வ­ராக (சாணக்­கியம் அற்­ற­வ­ராக) இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்கும் எப்­ப­டிப்­பட்ட நய­வஞ்­ச­கத்­தன்மை கொண்­ட­வ­ராக இருக்­க­மு­டி­யாது என்­ப­தற்கும் தவிர்க்க முடி­யாத எடுத்­துக்­காட்­டாக அவர் பிர­கா­சித்தார். நாளைய வர­லாறு இதனை ஏற்­றுக்­கொள்­ளத்தான் போகி­றது.

இந்தப் பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருப்­ப­வரை சம­கா­லத்தில் நய­வஞ்­சகத் தன்­மைக்­கான வெளிப்­ப­டை­யான உதா­ர­ண­மாக ஆசி­ரி­யர்­களும் ஒழுக்க போத­கர்­களும் தத்தம் மாண­வர்­க­ளுக்கு எடுத்து விளக்க முடியும்.

மேற்­கூ­றப்­பட்ட இரண்டு பதப் பிர­யோ­கங்­க­ளையும் நாம் மேலும் தெளிவாக விளங்­கிக்­கொள்­ளவும் இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு போதனை செய்­யவும் இலங்கை முஸ்­லிம்­களின் இனத்­துவ அர­சி­யலில் பல வர­லாற்று உதா­ர­ணங்கள் உள்­ளன.

முஸ்லிம் அர­சியல் தோற்­றம்­பெற்ற பின்னர் வந்த தேர்­தல்­களுள் 1989 பாரா­ளு­மன்றத் தேர்தல் முக்­கி­ய­மான ஒன்று. ஐ.தே.க.விலி­ருந்து தத்தம் பதவி ஆசைகள் நிரா­சை­யாக ஆக்­கப்­பட்­ட­மையால் மு.கா.வின்பால் ஓடோ­டி­ வந்த பல­ரையும் ஒற்­று­மையின் கயிற்றை பற்றிப் பிடிப்­பான்­வேண்டி சேர்த்­துக்­கொள்ள வேண்­டிய நிலையில் தலைவர் அஷ்ரப் இருந்தார். அப்­படி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்தும் ஒருவர் ஓடோடி வந்தார். அவர் ஓடோடி வந்த அர­சியல் முழி­வி­ய­ளத்­தோடு உள்­ளூராட்சி மன்றத் தேர்­தலும் கைகூடி வந்­தது. ஆகவே, காத்­தான்­குடி உள்­ளூ­ராட்சி சபைக்கு மு.கா. தராசு சின்­னத்தில் வேட்­பா­ளர்­களை முன்­மொ­ழிந்­தி­ருந்­தது. ஆனால், அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்தச் சட்­டத்­தினால் அந்தத் தேர்­த­லா­னது பின்­போ­டப்­பட்­டது. அதன் பிற­கான வடக்­கு-­–கி­ழக்கு மாகாண சபைக்­கான தேர்­த­லிலும் அந்த மன்­சாட்சி இல்­லாத சாணக்­கியன் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஒழுங்­கு­களும் ஏற்­பா­டா­கி­யி­ருந்து.

இத­னி­டையே 1989 பாரா­ளு­மன்றத் தேர்­தலும் வந்து சேர்ந்­தது. முதன்­மு­த­லாக தொகுதி முறை நீக்­கப்­பட்ட தேர்தல் அது. மட்­டக்­க­ளப்பு இரட்டை அங்­கத்­தவர் தொகு­தியும் கல்­குடா தொகு­தியும் சேர்ந்து மட்­டக்­க­ளப்பு தேர்தல் மாவட்­ட­மாக நிய­ம­னப்­பத்­தி­ரங்கள் தேர்தல் ஆணை­யா­ளரால் கோரப்­பட்­டி­ருந்­தன.

ஏற்­க­னவே பிர­தே­ச­வா­தத்தில் மூழ்­கிப்­போன ஓர் இன­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டி­ருந்த முஸ்­லிம்­களை ஒன்­று­ப­டுத்தும் பாரிய பொறுப்பு தலைவர் அஷ்­ரப்பின் தோள்­களில் வந்து சேர்­கின்­றது. இம்­மக்­களை ஒன்­று­சேர்க்க பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை இவ்­வி­ரண்டு ஆண்­டு­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்தல் என்ற முடிவை மு.கா.வின் அன்­றைய மத்­தி­ய­குழு (அப்­போது அர­சியல் அதி­யுயர் பீடமோ அல்­லது உச்­ச­பீ­டமோ இருக்­க­வில்லை) தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றி­யி­ருந்­தது. சாணக்­கி­யமும் மன­சாட்­சி­யு­முள்ள இத்­தீர்­மா­னத்­துக்கு அன்­றைய மூன்று பிர­தான வேட்­பா­ளர்­க­ளுமே சாணக்­கி­ய­மாக இணங்­கி­யி­ருந்­தனர்.

தேர்தல் முடிந்து மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துக்­கான மு.கா.வின் ஆச­னமும் உறு­திப்­ ப­டுத்­தப்­பட்­டா­யிற்று. அதன்­படி முத­லி­ரண்டு ஆண்­டு­க­ளுக்கும் காத்­தான்­கு­டியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய ஹிஸ்­புல்லாஹ் என்­பவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மு.கா.வின் செய­லா­ள­ரினால் பரிந்­துரை செய்­யப்­பட்டார். செய்­யப்­பட்ட இணக்­கப்­பா­டு­க­ளுக்­கேற்ப இரண்டு ஆண்­டுகள் நிறை­வ­டைந்­ததும் ஹிஸ்­புல்லாஹ் இரண்­டா­ம­வ­ரான முகைதீன் அப்துல் காதர் என்­ப­வ­ருக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி போய்ச்­சேர்­வ­தற்­கான வழி­மு­றை­களை மேற்­கொள்­ளு­மாறு தலை­வரால் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது.

ஆனால், அங்கே ஒவ்­வா­மு­னை­க­ளான சாணக்­கி­யத்தை நய­வஞ்­சகம் கௌவி வெற்­றி­கொண்­டது. இந்த விடயம் நீதி­மன்­றம்­வரை சென்று, சட்­டத்தில் காணப்­பட்ட ஓட்­டைகள் மு.கா. தலை­மைக்கு தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­திற்று. இது முஸ்லிம் இனத்­துவ அர­சியல் வர­லாற்றில் சாணக்­கி­யத்­துக்கு நய­வஞ்­ச­கத்­தினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட முத­லா­வது மாபெரும் தலை­கு­னிவு.

மேலு­மொரு முக்­கிய சம்­ப­வத்­தையும் இங்கு சிலா­கித்துக் கூற­மு­டியும். இலங்­கையில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய அமை­தி­காக்கும் படை­யினர் சம்­மாந்­துறை நகரை 17.05.1989 அன்று தீயினால் துவம்சம் செய்­தனர். இது இலங்கை எங்­கணும் பாரிய அதிர்­வ­லையை உரு­வாக்­கிற்று.

இலங்­கையின் எல்லாப் பாகங்­க­ளிலும் மக்கள் வீதி­களில் இறங்கி ஆர்ப்­பாட்டம் செய்­தனர். குறிப்­பாக இந்தப் போராட்­டத்தில் மரு­தானை முஹி­யித்தீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் உலகின் கவ­ன­யீர்ப்பு மைய­மாகத் தொழிற்­பட்­டது. அதன் உட­னடி விளை­வாக இந்­திய அமை­தி­காக்கும் படை­யினர் நாட்டை விட்டு வெளியேற்­றப்­படல் வேண்டும் என்­பது இலங்கை முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த குர­லாக அன்று முதல் ஒலிக்கத் தொடங்­கிற்று.

அப்­போது வன்­மு­றையை மட்­டுமே அர­சியல் வழி­மு­றை­யாகக் கொண்­டி­ருந்த ஜே.வி.பி.யினர் ஏற்­க­னவே 27 ஜூலை 1987இல் இருந்து பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் மீண்டும் தீவி­ர­மாக ஈடு­பட்­டனர். ஜே.வி.பி. ஸ்தாபகர் ரோஹண விஜே­வீர உயி­ருடன் இருந்­து­கொண்டு வன்­முறை அர­சி­யலை வழி­ந­டத்திக் கொண்­டி­ருந்தார். அது இந்­தியப் படை­யி­ன­ருக்கு எதி­ரான சிங்­கள இளை­ஞர்­களின் கிளர்ச்­சி­யாகப் பார்க்­கப்­பட்­டது. எனவே, தெற்கில் ஜே.வி.பி.யினரை ஒரு வழிக்­குக்­கொண்டு வந்­தாக வேண்­டிய நிர்ப்­பந்­த­மான ஒரு தேவையும் அர­சுக்கு ஏற்­பட்­டது.

அதனால் ஜனா­தி­பதி பிரே­ம­தா­சவின் சாணக்­கிய மூளை பின்­வ­ரு­மாறு இயங்­கி­யது. அவர் 29.05.1989 அன்று கொழும்பில் நடை­பெற்ற பௌத்த விகாரை ஒன்றின் முக்­கிய வைப­வத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போது, இந்த ஆண்டு (1989) இறு­திக்குள் இந்­திய அமை­தி­காக்கும் படை­யினர் நாட்டை விட்டு முற்­றாக வெளியே­றி­விட வேண்டும் என்று கட்­டளை போன்ற ஒரு வேண்­டு­கோளை விடுத்தார். மட்­டு­மன்றி அதன் ஒரு சாத­க­மான அடை­யா­ளத்­துக்­காக அவர்கள் எதிர்­வரும் ஜூலை மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்தே இந்த நடை­மு­றையை ஆரம்­பித்­தாக வேண்டும் என்றும் திட­மாக அறி­வு­றுத்­தினார்.

இப்­போது இந்தப் பந்தை முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலை­வரின் ஆடு­க­ளத்துள் வீசினர் அவரின் அர­சியல் எதி­ரிகள்.

அவர் சொன்ன பதிலை இங்கு குறிப்­பி­டு­வ­தற்கு முன்னர் அன்­றைய இனத்­துவ அர­சியல், அன்­றி­ருந்த சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள், விசே­ட­மாக வடக்கு–கிழக்கு முஸ்­லிம்­களை சூழ­வி­ருந்த நெருப்பு வளையம், பிராந்­திய விஸ்­த­ரிப்­பு­வாதம் எனும் இந்­தி­யாவின் பூகோள அர­சியல் என்­பன பற்­றிய ஒரு பார்வை அவ­சி­ய­மா­னது. இந்­தியப் பிர­தமர் இந்­திரா காந்­தியும் அவரைத் தொடர்ந்த அவரின் புதல்வர் ராஜீவ் காந்­தியும் இந்­தி­யாவை பூகோள அர­சி­யலில் உலகில் கணி­ச­மான அந்­தஸ்­துக்கு உயர்த்தி வைத்­தி­ருந்த கால­மது. நேருவின் சாணக்­கி­யம்சார் அர­சி­யலின் தங்­கு­த­டை­யற்ற வாரி­சு­க­ளாக அவர்கள் இரு­வரும் ஒருவர் பின் ஒரு­வ­ராக பிர­கா­சித்­தனர்.

ராஜீவ் காந்தி அந்த சாணக்­கியப் பதக்­கத்தின் இறுதி வைர மணி­யாக இலங்­கிய காலம். ஆனால், அவரின் அர­சியல் கொலை­யுடன் இந்­தி­யாவின் பூகோள அர­சியல் வகி­பாகம் சிதை­வ­டையத் தொடங்­கிற்று.

இதனை மிக­நுட்­ப­மாக அவ­தா­னித்த ஜனா­தி­பதி பிரே­ம­தாச ஜே.வி.பி.யின் பயங்­க­ர­வாத நெருக்­க­டியில் இருந்து முழு நாட்­டையும் புலி­களின் பயங்­க­ர­வாத நெருக்­க­டி­யி­லி­ருந்து தன்­னையும் ரா­ஜ­தந்­தி­ர­மாக விடு­வித்­துக்­கொள்ள இச்­சந்­தர்ப்­பத்தை வெகு சாமர்த்­தி­ய­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் பயன்­ப­டுத்­தினார்.

சர்­வ­தேச விவ­கா­ரங்­களில் உலகின் தலை­சி­றந்த ரா­ஜ­தந்­தி­ரி­யாகப் பார்க்­கப்­பட்ட தீக் ஷித் என்ற இந்­திய பூகோள அர­சி­யலின் விமா­னியே திக்­கு­முக்­கா­டிப்­போ­கின்ற ஒரு தீர்­மா­னத்தை ஆர். பிரே­ம­தாச அப்­போது எடுத்­தி­ருந்தார். அதுதான் இந்­திய அமை­திப்­ப­டை­யினர் உட­ன­டி­யாக வெளியே­றி­யாக வேண்டும் என்ற அவரின் பிர­க­ட­ன­மான அக்னி வளை­ய­மாகும்.

இந்­தி­யப்­படை வெளியே­று­வது சரிதான். அதன் பின்னர் வடக்கு–கிழக்கின் பாது­காப்பு எனும் ஆயுதம் யாரின் கரங்­களில் இருக்­கப்­போ­கின்­றது என்­ப­தைப்­பற்றி அப்­போது இருவர் மட்­டுமே திட­மாக சிந்­தித்­தனர். ஒருவர் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன்.

வர­த­ராஜப் பெரு­மாளின் சாணக்­கி­ய­மற்ற ஒரு­த­லைப்­பட்­ச­மான தனி ஈழப் பிர­க­டனம் ஜனா­தி­பதி பிரே­ம­தா­ச­வுக்கு மட்­டு­மல்­லாது தனக்கும் கூட இவ்­வ­ளவு விரை­வாக சாத­க­மகப் போகின்­றது என்­பதை பிர­பா­க­ரனும் எதிர்­பார்த்­தி­ருக்­க­மாட்டார்.

ஆனால், இதனை சம­யோ­சி­த­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் பயன்­ப­டுத்தி வடக்கு– கிழக்கின் ஆயுதச் சம­நி­லையின் வெற்­றி­டத்தை தான் நிரப்­பிக்­கொள்ளும் சாணக்­கி­ய­மான வியூகம் ஒன்றை பிர­பா­கரன் வகுத்­துக்­கொண்டார். முஸ்லிம் பொது­மக்­கள்­கூட தங்கள் தலை­மைத்­து­வத்தின் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் மீறி புலி­களின் ஆயு­தங்­க­ளு­ட­னான பிர­வே­சத்­துக்கு பச்­சைக்­கொடி காட்­டினர்.

முஸ்­லிம்­களை காஷ்­மீ­ரிய எதி­ரி­க­ளா­கவே கருதி கிழக்கில் நுழைந்த இந்­தி­யப்­ப­டை­யினர் சிறிது சிறி­தாக முஸ்­லிம்­களின் அப்­பா­வித்­தன்­மையை புரிந்து கொண்­டி­ருந்த கால­மது. இப்­ப­டி­யான இரண்டும் கெட்டான் காலத்தில் இந்­தி­யப்­படை வெளியே­று­வதா வேண்­டாமா என்ற கருத்தை முஸ்­லிம்­களின் கருத்­தாக எடுத்­து­ரைக்­க­வேண்­டிய பாரிய சுமை அஷ்­ரப்பின் தோள்­க­ளுக்கு வந்­து­சேர்ந்­தது. ஒரு­புறம் வேடன் மறு­புறம் நாகம். இரண்­டுக்கும் நடுவே அழ­கிய கலைமான் என்ற தொடர் வடக்கு– கிழக்கின் முஸ்­லிம்­க­ளுக்கும் இலங்கை முஸ்­லிம்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக ஏதிர்­பார்க்­கப்­பட்ட அஷ்­ரப்­புக்கும் அப்­போது அழ­காகப் பொருந்தி வந்­தது.

அதா­வது, இந்­தி­யப்­படை வெளியே­றினால் அசா­தா­ர­ண­மாக வடக்கு–கிழக்கில் உரு­வாகப் போகின்ற பாது­காப்பு வெற்­றிடம் – -Security Vacuum எவ்­வாறு நிரப்­பப்­ப­ட­வேண்டும் என்று அப்­போது சிந்­தித்­தவர் முஸ்­லிம்­க­ளி­டையே வேறு யாரு­மல்ல, மு.கா.வின் ஸ்தாபகத் தலை­வ­ரான அஷ்ரப் மாத்­தி­ரமே.

இந்­தி­யப்­படை வெளியே­றினால் அந்தப் பாது­காப்பு வெற்­றி­டத்தை இலங்கை ஆயு­தப்­படை நிரப்­புமா அல்­லது முஸ்­லிம்கள் கண்டு அஞ்சிப் பயந்த விடு­தலைப் புலிகள் நிரப்­பு­வார்­களா என்ற நியா­ய­மான தன்­னு­டைய வாதத்தை அஷ்ரப் நாட்டை ஆண்ட நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மன­சாட்­சியின் முன்னே சாணக்­கி­ய­மான வினா­வாகத் தொடுத்தார்.

இலங்கை முஸ்­லிம்­களின் புத்­தி­ஜீ­விகள், பல்­க­லைக்­க­ழக கல்­வி­மான்கள், அர­சி­யல் ­வா­திகள், அரட்டை மன்­னர்கள் உட்­பட அனை­வரும் ஒரே நேர்­கோட்டில் ஒன்­றாக சிந்­திக்க அஷ்ரப் மாத்­திரம் மாறி யோசித்த தன்­னந்­தனி மனி­த­னாகத் தெரிந்தார். இந்­தி­யப்­படை விட்டுச் செல்­ல­வுள்ள பாது­காப்பு வெற்­றி­டத்தை யார் நிரப்­பப்­போ­கின்­றார்கள் என்­பது சட்ட ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­படும் வரை இந்­தி­யப்­படை வடக்கு–கிழக்­கி­லி­ருந்து வெளியே­றக்­கூ­டாது என்று தன்­னந்­த­னி­ய­னாக நின்று அஷ்ரப் தைரி­ய­மாகக் குரல்­கொ­டுத்தார்.

இந்தச் சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் தலை­மையின் சாணக்­கியம் மட்­டு­மல்­லாது முஸ்­லிம்­க­ளி­டையே அர­சியல் அதி­கா­ரத்­துக்­காக புரை­யோடிப் போயி­ருந்த நய­வஞ்­ச­கமும் தெட்­டத்தெளிவாக அம்­ப­லத்­துக்கு வந்­தது.

பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்­துக்­காக பேரி­ன­வா­தி­களின் பால் சென்றவர்கள் சாணக்­கி­யமும் தியாகத் தழும்­பு­களும் நிறைந்த அஷ்­ரப்பை இந்­தி­யப்­ப­டையின் கைக்­கூ­லி­யாகப் பரி­க­சித்­தனர்.

மட்­டு­மன்றி இந்­திய அமை­திப் ­ப­டை­யி­னரின் சமூக அடக்­கு­மு­றைக்­குள்ளும் அவர்­களின் கூலிப்­ப­டை­யி­னரின் பயங்­க­ர­மான நெருக்­கு­வா­ரங்­க­ளுக்­குள்ளும் சிக்கி, மீதி­யா­க­வி­ருந்த முஸ்லிம் இளை­ஞர்­களை ஆக்­ரோ­ஷப்­ப­டுத்தி அஷ்­ரப்பின் உயி­ருக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தவும் அவர்கள் முனைந்­த­மைக்கு பல சான்றுகள் உள்ளன.

சாணக்கியத்தோடும் சமூகத்தின் பாதுகாப்பு என்ற லட்சியத்தோடும் அஷ்ரப்பினால் தொடுக்கப்பட்ட அந்த வினா வெறும் வினாக்குறியோடு நின்றது. இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் எதிரியாகவிருந்த சில நாடுகளின் ராஜதந்திரிகள்கூட அஷ்ரப்பின் இந்த வினாவை பலவீனமாக்குவதில் முன்னின்று உழைத்தனர். முஸ்லிம் அப்பாவிப் பொதுமக்கள்கூட இந்திய அமைதிப்படை முஸ்லிம்களிடத்தே உண்டாக்கிய பேரழிவுகளை மாத்திரம் கருத்திற்கொண்டு புலிகளின் வரவை ஆதரிப்பதிலேயே முனைப்புக் காட்டினர்.

மு.கா.வின் கிழக்கு மாகாணத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 25 மோட்டார் சைக்கிள்களை தனது தலைமைக்குத் தெரியாமலேயே நயவஞ்சகமாக புலிகளுக்குப் பரிசளித்து, அவர்களுக்கான தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தி தனக்கான உயிர்ப்பிச்சையை பக்குவமாக பெற்றுக்கொண்டார். இது அந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் சாணக்கியமான நயவஞ்சகமாக இருந்ததால் பொதுமக்களின் செவிகளை சென்று சேரவேயில்லை.

1989 நவம்பரில் வரதராஜப்பெருமாள் தன்னுடைய ராஜதந்திரமற்ற, சுயாதீனமான தமிழீழ (Unilateral Declaration of Tamil Eelam) பிரகடனம் செய்தமை புலிகளின் சாணக்கியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த சந்தர்ப்பத்தில் புலிகள் மறைமுகமாக ஆர்வம்கொண்டிருந்த தமிழீழ அடைவுக்கான சந்தர்ப்ப காய்நகர்த்தலை Lanka Guardian இன் பிரதம ஆசிரியரும் இலங்கையின் தேசிய புத்திஜீவியுமாக அறியப்பட்டிருந்தவருமான மேவின் டி சில்வா கூட புலிகளின் சமாதானத்துக்கான ஈடுபாடாகவே பார்த்தார்.

1989 நவம்பரில் வரதராஜப்பெருமாள் வெறும் ஏட்டளவில் செய்த பிரகடனத்தை 1990 ஜூனில் புலிகள் யுத்த பிரகடனமாகச் செய்தனர். புலிகள் பிரேமதாசவுடன் நடந்துகொண்ட சமாதானத்துக்கான பின்வாங்கல் புலிப்பாய்ச்சலுக்கான பதுங்குநிலை என்பதை புரிந்துகொள்ள பிரேமதாசவும் ஆறு மாதங்களை கடக்கவேண்டியிருந்தது.

இலங்கை அரசியலில் மாத்திரமல்ல. உலக அரசியலிலும் சாணக்கியத்துக்கும் நயவஞ்சக முனாபிக் தனத்துக்குமான பிரிகோடு மிகவும் நுண்பாகமான நிலையிலேயே உள்ளது. ஒவ்வாமுனைகளான இவ்விரண்டு முனைகளும் ஒன்றையொன்று கௌவிக் கொள்ளுதலே நடைமுறை அரசியலின் காந்த விதியாகும்.

நுட்பமாக மக்களை ஏமாற்றத் தெரிந்த நயவஞ்சகன் சாணக்கியனாக பார்க்கப்படுவதும் மனசாட்சியுடன் அதேவேளை சாணக்கியமாக சமூகப் போராட்டங்களை முதன்மைப்படுத்துபவன் நயவஞ்சகனாக சமூக எதிரிகளால் காட்சிப்படுத்தப்படுவதும் இன்றைய உலகின் யதார்த்தங்களே.

– கங்­கத்­தி­யப்பா –

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!