பிரதி சபாநாயகர் பதவி – அங்கஜனுக்கு கடும் எதிர்ப்பு!

பிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்படுவதை பலர் எதிர்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“பிரதி சபாநாயகரின் நியமனத்துக்கு அங்கஜனின் பெயர் பிரேரிக்கப்படுவதை தமிழ்க் கூட்டமைப்பு எதிர்க்கின்றதா?” என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.இதற்கு பதிலளித்த அவர், “பிரதி சபாநாயகராக அங்கஜன் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதென்பது எவரதும் தனிப்பட்ட கருத்தல்ல. சபாநாயகரின் தலைமையிலான கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எழுந்த கருத்து இது.

அக்கூட்டத்தில் நிறையப் பேர் அவரது பெயர் பிரேரிக்கப்படுவதை எதிர்த்தனர். சிலர் கேள்வி கேட்டனர். கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை வெளியே சொல்லக்கூடாதென்பது மரபு.அதனை மீறுவோர் இருக்கின்றார்கள். ஆனால் என்னால் அதனைப்பற்றி விளக்க இயலாது. அங்கஜன் நியமிக்கப்படுவதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பதை மட்டுமே சொல்ல முடியும்.” என அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!