நெற்றியின் நடுவே வால்.. விசித்திர நாய்குட்டி.!!!

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகரில் முகத்தில் வால் உடைய விசித்திர நாய்க்குட்டி ஒன்று தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.இது தொடர்பாக, இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டெபான் ‘இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் பார்த்ததே இல்லை. கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்டேன். அதற்கு நார்வால் என பெயரிட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட நாய்க்குட்டி கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்ததில் அந்த வால், நாய்க்குட்டியின் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பிலும் இல்லை எனவும் அந்த வால் நெற்றியின் நடுவே அமைந்துள்ளதால் மேலும் கீழும் அசைக்க முடியாது என தெரிய வந்ததுள்ளது.

மேலும் இந்த வால் இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. மற்ற நாய்களை போலவே நார்வால் சாதாரணமாகவே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.தற்போது இந்த நாய்க்குட்டியூனிகார்ன் பப்பி என இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. என்பது குறிப்பிடத்தக்தாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!