ஒவ்வொரு வாக்காளருக்காகவும் 344 ரூபா செலவு!

நாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழு 344 ரூபாவை செல­வி­டவுள்ளதாக தாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­து.

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில், அவர்கள் அனை­வரும் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு செல­விட்­ட­தாக மதிப்­பி­டப்­படும் மொத்த தொகை 10 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும். அதன்­படி ஒரு வாக்காளர் தொடர்பில் வேட்­பா­ளர்கள் செல­விட்ட தொகை 625 ரூபா என மதிப்­பீடு செய்­யப்பட்­டுள்­ளது.

தேர்­தல்கள் ஆணைக்குழுவின் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்­களின் பிர­காரம், கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் மொத்த செலவு 715 மில்­லியன் ரூபா­வாகும். அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்கு செல­வி­டப்­பட்ட தொகை 54 ரூபா­வாகும். 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக 1856 மில்­லியன் ரூபாவை தேர்­தல்கள் திணைக்­களம் செல­விட்­டுள்­ளது.

இதன்­போது வாக்­காளர் ஒரு­வ­ருக்கு 132 ரூபா செல­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் 2015 ஆம் ஆண்டில் 2706 மில்­லியன் ரூபாவை தேர்­தல்கள் திணைக்­களம் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக செல­விட்­டுள்ள நிலையில், அப்­போது ஒரு வாக்­கா­ள­ருக்­காக 180 ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யி­லேயே இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் செல­வீனம் 5500 மில்­லியன் ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ள­துடன், வாக்­காளர் ஒரு­வ­ருக்­கான செலவு 344 ரூபா என மதிப்­பி­டப்பட்­டுள்­ளது. அதன்­படி இம்­முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக் குழுவும் ஒரு வாக்காளருக்காக செலவிட்ட மொத்த செலவு 965 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!