அமெரிக்காவில் பள்ளியில் புகுந்து சரமாரியாக சுட்ட இளம் மாணவன்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிட்டா காலிப் எனும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ஷெரீப் அறிவித்துள்ளார். கருப்பு ஆடை அணிந்த 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். பள்ளி அறைகளில் மாணவர்கள் பதுங்கிக் கிடந்த நிலையில் பெற்றோர் பெரும் பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருந்தனர்.

ஒருவழியாக துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவனை சுட்டுப் பிடித்துள்ள போலீசார் ஏன் அப்படி செய்தான் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு இதுபோன்ற நேரங்களில் என்ன செய்வது என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!