பூனைகளுக்கான கூண்டில் 5 வயது சிறுவனை அடைத்து – கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்த கொடூர தாய்…?

சிங்கப்பூர் நாட்டில் 5 வயது சிறுவனை கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் இளம் தம்பதி நீதிம்னற விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.சிங்கப்பூரில் குடியிருக்கும் 27 வயது தம்பதி அஸ்லின் அருஜுனா மற்றும் ரிட்ஜுவான் அப்துல் ரஹ்மான் ஆகிய இருவருமே சொந்த மகனை துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்பவர்கள்.

செவ்வாய்க்கிழமை நடந்த முதற்கட்ட விசாரணையில், தங்களின் 5 வயது மகனை திட்டமிட்டு கொல்லவில்லை என தாயார் அஸ்லின் தெரிவித்துள்ளார்.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில், 5 வயது சிறுவனை பூனைகளுக்கான கூண்டில் அடைத்து சித்திரவதை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மட்டுமின்றி பல மாதங்கள் தொடர்ந்த இந்த துன்புறுத்தலின் ஒரு கட்டத்தில் அஸ்லின் தமது 5 வயது மகன் மீது கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளார்.

இதில் உடல் வெந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான். சிறுவன் இறந்து மூன்று நாட்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமது மகனை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் தமக்கு இல்லை எனவும், ஆனால் அவனது நடவடிக்கை தமக்கு பல கட்டத்தில் எரிச்சலை தந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மட்டுமின்றி, தமது எஞ்சிய பிள்ளைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சுமார் 75 சதவிகிதம் உடல் வெந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட சிறுவன் அடுத்த நாளில் மரணமடைந்துள்ளான்.

உடற்கூராய்வில், சிறுவனுக்கு சிறுநீரகம் பழுதாகி இருந்ததும், மூகுடைந்த நிலையில் இருந்ததும், முகத்தில் காயங்களுடன் காணப்படதும் தெரியவந்தது.சிறுவன் மரணமடைவதற்கு முதல் நாளில் பூனைகளுக்கான கூண்டில் அடைப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.சிறுவனை குளிக்க அழைத்ததாகவும், ஆனால் அவன் மறுத்து அடம் பிடித்ததால் அந்த நீரை அவன் மீது கொட்டியதாக தாயார் அஸ்லின் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் காயங்களின் தன்மையை பரிசோதித்த நிபுணர்கள், சிறுவன் மீது ஊற்றப்பட்ட நீரின் கொதிநிலை 198F என இருக்கும் என தெரிவித்துள்ளனர்.மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சிறுவனின் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொலைக்குற்றத்தை இருவரும் மறுத்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அடுத்தடுத்த நாட்களில் தொடரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!