ரொறன்ரோவில் 15 மாடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

ரொறன்ரோ, ஜேன் வீதி மற்றும் பிஞ்ச் அவென்யூ மேற்கிற்கு அருகே 15 மாடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த தீவிபத்தின் போது, ஐந்து தீ விபத்துக்கான அலாரம் ஒலிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், ஒருவர் ஆபாத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது சீரான நிலையை எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறு காயங்களுக்கு உள்ளான ஐவர், சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தில் வசிக்கும் ஏராளமான மக்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதி பாதுகாப்பு என எண்ணும் பட்சத்தில் அவர்கள் அங்கு மீண்டும் தங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்தோடு, இடம்பெயர்ந்த அனைவருக்கும் தங்குவதற்கு டிரிஃப்ட்வுட் சமூக மையமும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், எத்தனை பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. தீ ஏற்பட்டதற்கு காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!